அறம் – ஒரு விருது

அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது.

குழும நண்பரான எம்.ஏ.சுசீலா மொழியாக்க விருதை தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் மொழியாக்கத்துக்காக பெறுகிறார்.

நான் பெருமதிப்பு கொண்டுள்ள கவிஞர் அபி இவ்விருதின் ஒருங்கிணைப்பாளர்.

இவ்விருதின் முக்கியமான மகிழ்ச்சி என்பது நான் என் ஆசானாக எண்ணும் கோவை ஞானி அவர்களுக்கு சிறந்த தமிழறிஞருக்கான விருது அளிக்கப்பட்டிருப்பதுதான்.

அ.முத்துலிங்கம். அவர்களுக்கு அயலக இலக்கியத்துக்கான விருது அவரது அமெரிக்காக்காரி என்ற நூலுக்காக அளிக்கப்பட்டுள்ளது.. ஞானிக்கும் அ.முத்துலிங்கத்துக்கும் என் வணக்கம்.

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைபீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்