சாப்ளின் – ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்.

நீங்கள் பஸ்டர் கீட்டனின் படங்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். [Buster Keaton] அவர் சாப்ளினின் சமகாலத்தவர். சாப்ளின் அளவுக்கு பிரபலமானவரல்ல. ஆனால் அவரளவுக்கே முக்கியமானவர்

பஸ்டர் கீட்டனின் சிறு மௌனப்படங்கள் மிக வேடிக்கையானவை- அதேசமயம் சிந்தனையை தூண்டுபவை. சாப்ளின் போல ஸ்லாப்-ஸ்டிக் நகைச்சுவை அவற்றில் இல்லை. ஆனால் புன்னகைக வைப்பவை அவை

பஸ்டர் கீட்டன் சாதாரணமாக எங்கும் கிடைப்பதில்லை. சிறந்த கடைகளில் கிடைக்கலாம். சுருக்கமான தகவல்களுக்கு இந்த இணைப்பை நோக்கவும்

http://www.imdb.com/name/nm0000036/

பஸ்டர் கீட்டனின் ‘த ஜெனரல்’ ஒரு நல்ல படம்

http://www.imdb.com/title/tt0017925/

படங்களை சிபாரிசு செய்வதில் எனக்குத் தயக்கம் உண்டு. திரைப்படங்கள் பற்றிய ஆழமான புரிதல் என்பது அவற்றில் உள்ள பன்முகத்தன்மை பற்றிய நேரடி அனுபவம் மூலமே கைவரும் என்று படுகிறது. வேறு எந்த படைப்பிலக்கியத்துறையையும் போலவே மிகப்பிரபலமான படைப்புகளுக்கு சற்று கீழே இருப்பனவற்றை கவனிப்பது கண்டிப்பாக முக்கியமான அனுபவமாக அமையும்.

நான் சிபாரிசு செய்யும் படைப்புகளின் இன்றைய காட்சித்தரம் நான் சொல்லும் அனுபவத்தை அளிக்காமல் போகலாம். தரமான படம் கிடைக்க முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்

எம். முரளி

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம் ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்