புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி

 

இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும்  சுற்றி அலைந்து
அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் ,
நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .
அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .

தற்பொழுது மதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி  வளாகத்தில் “நான் மாட கூடல் ” அரங்கில்  
அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது . தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .
 
– அன்புடன்
நரன்
www.narann.blogspot.com

முந்தைய கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்களை அணுகுதல்….