ஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்

//இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு தளத்தை அடைகின்றது. இந்த genre shift அலாதியான குறுகுறுப்பைத் தந்தது. இது நேரடிக் கதை அல்லாமல் கவிதைக்கு அருகில் நின்றதால் இதன் மீதான விவாதமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

முகாமின் மிக livelyயான அமர்வு கவிதை அமர்வே என்று தோன்றுகிறது. க. மோகனரங்கனின் உலகக் கவிதைகள் தொடங்கி சாம்ராஜின் தற்காலத் தமிழ்க் கவிதைகள் வரை அனைத்துக் கவிதைகளுமே மிக நல்ல அனுபவத்தைத் தந்தன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் : மணிகண்டன் இரண்டு மலையாளக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டுமே அனிதா தம்பியின் கவிதைகள். இந்த இரண்டு கவிதைகளையும் இணைக்கும் முகமாக சங்க சித்திரங்களில் இடம்பெற்ற ஊஞ்சலாட்டம் குறித்த ஒரு குறுந்தொகைப் பாடலைத் தேர்ந்தெடுத்து ஒரு வாசிப்பை நிகழ்த்தினார். இது மிக நல்ல வாசிப்பாக எனக்குப் பட்டது. ஆனால் இவ்விதமான வாசிப்பு அக்கவிதைகளைத் தனித்தனிக் கவிதைகளாக அணுகவிடாமல் செய்வதாக ஒரு விவாதம் எழுந்தது. மணிகண்டன் தன் வாசிப்பை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும்.

பொறாமை கொள்ள வைக்கும் செயலூக்கம் மிக்க நண்பர்களைப் பார்ப்பது ஒரு புத்துணர்வு தரும் அனுபவம். ஜெவும், சுனிலும், அரங்காண்ணனும் ஜாஜாவும் ராமும் சுரேஷும் ஜடாயுவும் சுசீலா அம்மாவும் நாஞ்சில் நாடனும் தேவதேவனும் அதைத்தான் தந்தார்கள்.//

http://angumingum.wordpress.com/2013/07/04/yercaud_meet_2013

முந்தைய கட்டுரைகௌரவக்கொலை
அடுத்த கட்டுரைகிராவும் காந்தியும் – கடலூர் சீனு