இணைப்புகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெயன்
நலமறிய ஆவல். உங்களது “பூமியின் முத்திரைகள்” குறு நாவலின் சில பத்திகளை cognitive linguistics எனும் விமர்சன முறைப்படி இக்கட்டுரையில் http://thiruttusavi.blogspot.com/2009/08/g-spot-1.html விமர்சித்துள்ளேன். நன்றி.
அன்புடன்
அபிலாஷ்,ஆர்


Regards
R.Abilash
http://thiruttusavi.blogspot.com/

 

அன்புள்ள அபிலாஷ்

உங்கள் கட்டுரையை வாசித்தேன். ஒரு கவனத்துக்குரிய விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். அவ்வகாஇயில் குறிப்பிடத்தக்க கட்டுரை.

இக்கட்டுரையின் இரு சிக்கல்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று இது படித்து எடுத்துக்கொண்ட மொழியில் அமைந்திருக்கிறது. ஆகவே ஒரு நெருடலான நடை உருவாகி இருக்கிரது. கற்ற ஒருவிஷயத்தை நாமே ஒரு ஆக்கத்தில் போட்டுப்பார்த்து நம் ரசனை-  ஆய்வு என்னும் கோணத்தில் சொல்வதே முக்கியமானது

இரண்டாவதாக என்ந்த ஒரு கோட்பாட்டையும் அப்படியே ஒரு படைப்பில் போட்டுப்பார்ப்பது நல்ல வாசிப்பு அல்ல. அக்கோட்பாடுந் அம் வாசிப்புக்கு எவ்வகையில் உதவி நம் இலக்கிய ரசனையை மேம்படுத்தியது என்பதே முக்கியம்

ஜெ

 

அன்புள்ள ஜெமோ,
எனது கவிதைகள் உயிரோசையில் பிரசுரமாகியுள்ளன.
சந்தோஷமான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1853
 

அன்புடன்,
ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்
நவீனக் கவிதைக்குரிய மொழியமைப்பும் செறிவான படிம அமைப்பும் உங்கள் கவிதையில் கைகூடியிருக்கின்றன. கவிமொழி ஒரு கருவி போல. அதன் மூலம் அள்ளக்கூடியவை உங்களுக்குள் நிறைந்திருக்கும். வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

எப்படி இருக்கிறீர்கள்?

உங்கள் அமெரிக்க பயணம் எப்படி இருக்கிறது?

என் நண்பர் சுந்தரவடிவேலு திருப்பூர் அவர்கள் எழுதும் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். நல்ல தமிழில் எழுதுகிறார்

உங்கள் ஊக்கமூட்டும் சொற்கள் அவருக்கு உதவும் என நினைக்கிறேன்

http://tiruppurtvsundar.blogspot.com/

 

விஜயசங்கர்
பெங்களூர்

அன்புள்ள விஜயசங்கர்

உங்கள் நண்பரின் இணையதளத்தைப் பார்த்தேன். அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது. தொடக்க நிலை எழுத்து.  எழுத்தின் சவால்களை அவர் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரத்துடன் சந்திக்க வேன்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது தமிழ் அவருக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இந்த எழுத்துக்களில் இருந்து உருவாகிரது

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

தோமா கிறித்தவம் பற்றி எழுதியிருந்தீர்கள்.

 

இளையராஜா, கேபி சுந்தராம்பாள் மற்றும் தேசிய கீத பின்னணி உதவியுடன் சூடாகப் பரிமாறப்படுகிறது.
 
1. Hinduism- a heresy of Thomas Christianity:
 
http://www.youtube.com/watch?v=u669U_93l50&feature=related
 
2. Origin of Christianity in Madras:
 
http://www.youtube.com/watch?v=wf7uVm0vX1g&feature=related
 
3. Silapathikaram- An Epic with Christian allegiance
 
http://www.youtube.com/watch?v=HL7doDuTPUY&feature=related
 

 

அன்புள்ள அருணகிரி,

சமீபத்தில் அமெரிக்க வானொலியில் ஒரு நேயர் கேட்டார் தோமா கிறித்தவம் என்பது ஒரு கிராக்பாட் கோட்பாடு. அதைப்போய் ஏன் எதிர்க்க வேண்டும் என்று. நான் சொன்னேன், மெல்லமெல்ல அதை வரலாறாகாவே ஆக்கும் திரிபுவேலைகள் ஆரம்பிக்கும் என்றும் அதன் பின் நம் முற்போக்கு சிந்தனாவாதிகள் அதை எதிர்ப்பவர்களை பிற்போக்குவாதிகள் என்று சொல்வார்கள் என்றும். இன்றுவரை நம் முற்போக்காளர் காத்துவரும் அமைதியே அதற்கு ஆதாரம். என் கூற்றுகளுக்கான ஆதாரமாகவே இந்த இணைப்புகளைக் கருதுகிறேன்
ஜெ 

 

அன்புள்ள ஜெ

உங்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டா?

 

இது என்னுடைய பழைய சில கிறுக்கல்கள்

http://ensanthosh.wordpress.com/

 
– santhosh

 

அன்புள்ள சந்தோஷ்

ஓவியத்தில் இசையில் உள்ள பயிற்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. தொடர்ச்சியான ஆர்வம் உன்டு என்று சொல்லலாம்.

உங்கள் ஓவியங்களை ரசித்தேன்

ஜெ

 

ஐயா வணக்கம்,

நானும் எனது நண்பரும் சேர்ந்து ஒரு சிறிய குறும்படம் ஒன்றை எடுக்க முயன்றோம். எங்கள் முயற்சியின் நிறை குறைகளை தங்களை போன்ற எழுதுகோல் புரட்ச்சிக்காரர் அலசி ஆராய்ந்து தெரிவித்தால், எங்களின் அடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

Here the link:

http://www.ithutamil.com/content.aspx?type=3&postid=4b658d64-fab7-4400-b3e1-907aa4224cd4

 
நன்றி
சே.ராஜப்ரியன்

அன்புள்ள ராஜப்பிரியன்

நான் என்ன புரட்சி செய்தேன் என்று எனக்கு தெரியவில்லையே..
ஜெ

முந்தைய கட்டுரைஜெயமோகன் நிகழ்ச்சிகள்
அடுத்த கட்டுரைஎழுத்துப்பிழை கடிதங்கள்