//
இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல பெரும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன்.அவைகளோடு ஜெ முன்னெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கமுடிவதில்லை. கடமைக்காகவும், லெளகீக பயன்களுக்காகவும் கல்வி, ஆராய்ச்சி புலங்களால் நல்கைகளைப் பெற்றுக்கொண்டு, பெரும் விளம்பரத்துடன் நடத்தப்பெறும் ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் எனக்கு ஒவ்வாமையைத் தருவன. முடிந்தவரை அவைகளைத் தவிர்க்கவே முயல்வேன், எனக்கு அதனால் லெளகீகப் பயன்கள் இருந்தபோதிலும். ஆனால் இது அப்படியல்ல;சென்ற இரண்டு முறைகள் ஊட்டி கூட்டங்களைத் தவறவிட்டதே எனக்கு பெரும் சோகம் அளித்தது.//
http://puliamaram.blogspot.in/2013/07/blog-post.html
https://lh3.googleusercontent.com/-jxcA3z4eVs8/UdExJ-v6nPI/AAAAAAAAG80/9aEcLremEzA/s128/DSC03483.JPG