தமிழ் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு பல ஒலிகளுக்கும் ஒரே எழுத்தையே தமிழில் நாம் பயன்படுத்துகிறோம். ‘க ச ட த ப’ எனும் இதே எழுத்துக்களையே ‘ga gha dha ba bha’ போன்ற உச்சரிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம். என் கேள்வி என்னவெனில் தமிழில் மட்டும் ஏன் இந்த எழுத்துப்பற்றாகுறை? இது இன்னும் பண்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறதா?

சிவகுமார் ஹரி

அன்புள்ள சிவகுமார்

எல்லா ஒலிகளையும் எழுதக்கூடிய மொழி என உலகில் ஏதும் இல்லை. எழுத்துமொழி என்பது ஒரு அடையாளக்குறிப்புதான். அதைக்கொண்டு செவிமொழியை நாம் கற்பனையில் உருவாக்கிக் கொள்கிறோம். அது ஒரு பழக்கம், பயிற்சி. ஆங்கிலத்தில் to என்பதையும் go என்பதையும் எப்படி வேறுவேறாக வாசிக்கிறோம் அதைப்போல

சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் எல்லா ஒலிகளையும் எழுத முயன்றன. அவை தேங்கியமைக்கு அதுவும் ஒரு காரணம். எளிமையான எழுதுமுறை இருப்பதனால்தான் ஆங்கிலம் முக்கியத்துவம்பெற்றது என்றுகூடக் கூறலாம். தமிழின் எளிய எழுதுமுறை அதன் பெரும் பலம்

ஜெ

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்
அடுத்த கட்டுரைஅலை, இருள், மண்- கடிதங்கள்