இந்துமதம் ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

வாசகர்களின் பதிவுகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் தாங்கள் ஒரு நடுநிலையாளர் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்து மதத்தின் ஆணிவேரே வர்ணாஸ்ரம தர்மம்தான். நம்மை நமது மதமே பிரித்து வைத்ததுதான் அந்நியர் வருகைக்கு ஆரத்தி எடுத்தது. பிரித்தாளும் சூழ்ச்சியை அந்நியர்கள் நம்மிடம்தான் கற்றுக்கொண்டார்கள். சமஸ்கிருதம் இந்தியாவெங்கும் பொதுமொழியாக இருந்தது என்ற கருத்தை மொழியியலாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த கலப்பட மொழிகள். பிற இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதமும் பெர்சியன் போன்ற மொழிகளின் கலவை. உருதுக்கும் இந்திக்கும் உள்ள நெருக்கம் இதைத் தெளிவுபடுத்துகிறது. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கிய அனைத்துச் சொற்களையும் உதறிவிட்டுக்கூடத் தமிழைப் பயன்படுத்தமுடியும். ஆனால் சமஸ்கிருதம் தவிர பிற இந்திய மொழிகளுக்கு இது பொருந்தாது. சமஸ்கிருதம் மதத்தின் பெயரால் திணிக்கப்பட்ட மொழியென்பதை ஆழ்ந்து சிந்தித்தால் தெளிவு கிடைக்கும். வர்ணாஸ்ரம தர்மம்தான் சாதி அமைப்புகளின் ஊற்றுக்கண். சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உருக்கியதும் அதுதான். இந்தக் கருத்தைத் தவறு என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்.

உஷாராணி

அன்புள்ள உஷாராணி,

இந்துமதம், இந்துசிந்தனை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் முன்வைப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எந்தத் தளத்தில் நின்று பேசுகிறார்கள் என்பதற்கு உங்கள் கடிதம் ஒரு பெரிய சான்று

நீங்கள் முதலில் நான் எழுதியிருப்பவற்றை சற்றே பொறுமையாக வாசிக்கவேண்டும். வாசித்தால் நான் சொல்வதாக நீங்கள் புரிந்துகொண்டிருப்பதெல்லாமே நீங்களே கற்பனை செய்துகொண்டிருப்பவை என்றும் நான் சொல்லக்கூடியவை இவையல்ல என்றும் கொஞ்சம் கொஞ்சமாகப்புரியக்கூடும்.

இம்மாதிரி கற்பனையான எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றைவரிகளை எதிர்த்தரப்பாகக் கற்பனைசெய்துகொண்டு அதற்குப்பதில்சொல்லித்தான் இங்கே எல்லாரும் இந்துமத எதிர்ப்பைக் கக்குகிறார்கள்.

ஜெ

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது பதிவிற்கு தாங்கள் உடனடி பதில் அனுப்பியதற்;கு எனது மனமார்ந்த நன்றி. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். அதில் உள்ள நடைமுறைக் குறைபாடுகள், இந்துமதத் தலைவர்கள் ஆதரிக்கும் மூடப்பழக்கங்கள், மதச்சடங்குகளின் பெயரால் உணவுப்பொருள்களை வீணடித்தல், சுற்றுப்புறச் சூழலை நாசம் செய்யும் செயல்கள் (சான்றாக தீபாளி வெடிகள், ஹோலி;ப்பொடி தூவல்) மக்களைப் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என சாதிபிரித்துக்; காட்டும் கொடூர மத அமைப்பு ஆகியவற்றையெல்லாம் கண்டித்து மக்களை நல்வழிப்படுத்த எண்ணாத இந்து மதத்தலைவர்கள், தங்களைப்போன்ற பிரபலமானவர்கள் இவையெல்லாம் என் பதிவின் ஆதாரங்கள். என் கேள்விகளுக்கு தங்களால் நிச்சயம் பதில் சொல்ல இயலாது என்பதுதான் வெளிப்படையான உண்மை. உங்கள் மழுப்பல் எனது குறையல்ல. காலம் கடந்துவிடவில்லை. என் கேள்விகளுக்குத் தங்களின் அறிவியல்சாரந்த பதிலை எதிர்பார்க்கிறேன்.

இப’படிக்கு,

உஷா ராணி.

அன்புள்ள உஷாராணி

தங்கள் தன்னம்பிக்கை தங்கள் பலம்

எதையுமே வாசிக்காமல் இருக்கும்போது அந்த தன்னம்பிக்கை கடைசிவரை அப்படியே நீடிக்கும்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைமுழு மகாபாரதம்
அடுத்த கட்டுரைஇரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்