அரவிந்தன் கன்னையன்

அமெரிக்காவில் இருந்து நண்பர் அரவிந்தன் கன்னையன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் நாஞ்சில்நாடனிடம் அவர் அமெரிக்க வருவதர்கு முன்னால் என்னென்ன நூல்களை வாசித்தார் என்று கேட்டது அவர்தான் என்றும் அதற்கு அறிவார்ந்த காரணங்கள் மட்டுமே இருந்தன, மட்டம் தட்டும் நோக்கமில்லை என்றும் தெரிவித்திருந்தார். நாஞ்சில் சம்பத் என்று நினைத்து வந்ததாக அவர் சொல்லவில்லை, அது அவருடன் வந்த இன்னொருவர் சொன்னது என்றார்.

நாஞ்சில் என்னிடம் பெயர் எதையும் சொல்லவில்லை. ஞாபகமிருக்கவும் வாய்ப்பில்லை. ஆகவே நான் சொன்னது அரவிந்தன் கன்னையனை அல்ல. மேலும் நாஞ்சில் சொன்ன இரு நிகழ்ச்சிகளை நான் கலந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். தவறுக்கு அரவிந்தன் அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

திரு அரவிந்தன் கன்னையன் என்னுடைய கருத்துக்களை மறுத்து எழுதுபவர் என்றாலும் அவரது கடிதங்களில் எப்போதும் நானறியாத பல விஷயங்கள் இருந்து வருகின்றன. அவ்வகையில் அவர் மேல் பெரும் மதிப்பு எனக்குண்டு

ஜெ