விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013

ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாசகிகள் தங்குவதற்குத் தனித்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மொத்த இடங்கள் – 60. சிறப்பு அழைப்பாளர்களைத் தவிர்த்து 50 இடங்களே உள்ளன. முதலில் பதியும் 50 நபர்களுக்கே முன்னுரிமை. மூன்று நாட்களுக்குத் தங்குமிடம், உணவு செலவுகள் அனைவராலும் பகிர்ந்துகொள்ளப்படும்.

விஜயராகவன் அமைப்பாளர்

மேலும் விவரங்களுக்கு :

விஜயராகவன் – 9843032131

நிபந்தனைகள்