வாசலில் நின்ற உருவம் பற்றி…

அன்புள்ள அசோக்

வாசலில் நின்ற உருவம் வாசித்தேன். கதையை ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லமுடியும்.. முழுமையான இலக்கியப்படைப்பாக அமையவில்லை.

ஏன் என்று சொல்ல சிலவற்றைச் சுட்டுகிறேன்

1. இவ்வகைக் கதைகள் எண்பதுகளுடன் முடிந்துவிட்டன. முற்றிலும் மன ஓட்டங்கள் வழியாகவே செல்லக்கூடியவை. புறவுலகுடன் மெல்லிய தொடர்பு மட்டுமே கொண்டவை. இவை நவீனத்துவகாலக் கதைகள் என்று சொல்லலாம். காஃப்காத்தனமானவை. இன்று இவற்றை வாசிக்கையில் இவற்றின் சட்டகம் சற்று சலிப்பூட்டுகிறது

2. இவ்வாறு மன ஓட்டங்கள் வழியாகச் செல்லும்போது அந்த மனமொழி அன்றாடவாழ்க்கை சார்ந்த நேரடியான விவரணையாக இருப்பது கதையை இன்னும் சற்று கீழிறக்குகிறது. அந்த மனமொழி இன்னும் சற்று உள்ளடுக்குகள் கொண்டதாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது இன்னும் படிமங்கள் கொண்டதாக.

3. கதை என்பது எப்போதுமே ‘நிகழ்வது’தான் . நினைப்பது அல்ல. நிகழ்வதுடன் இயல்பாக இணைந்துள்ள நினைப்புகளுக்கே கதையில் உண்மையான வல்லமை கைகூடும். இக்கதையில் நிகழ்வுகள் மிக குறைவாக, அழுத்தமற்றவையாக உள்ளன

ஆனாலும் கதை முக்கியமானதாக இருப்பது ஒரு சிறிய எல்லைக்குள் மூன்றுதலைமுறையின் தந்தை மகன் உறவின் நிறபேதங்கள் செறிவாக ஓடிமறைவதனால்தான். அவ்வகையில் வாசித்து முடித்தபின் கதை அளிக்கும் மெல்லிய அதிர்வு மனதில் நீடிக்கிறது.

வாழ்த்துக்கள்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள்- உத்திகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாதிக்கட்சிகள்