முரளி

அஞ்சலி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் என் அலைச்சல் நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரம் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளைப் பார்க்கும்பொருட்டு சென்றுவிட்டு சந்திப்பு சற்றே கசப்பாக முடிய மனச்சோர்வுடன் திரும்பும்போது தற்செயலாக அறிவிப்பை பார்த்துவிட்டு சி.என்ஸ்ரீகண்டன் நாயர் எழுதிய புகழ்பெற்ற நாடகமான ‘லங்காலட்சுமி’யை பார்க்க ஓர் அரங்குக்குள் நுழைந்தேன். சி.என்.ஸ்ரீகண்டன் நாயரைப்பற்றி பி.கெ.பாலகிருஷ்னன் எழுதியிருக்கிறார், என்னிடமும் சொல்லியிருக்கிறார். ஆற்றூர் ரவிவர்மாவும் அவரது நண்பரான எம்.கங்காதரனும் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் மேலும் பலவருடம் கழித்து. மலையாள நாடக ஆசிரியர்களில் இருவர்தான் முக்கியமானவர்கள். … Continue reading முரளி