கன்னிநிலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
கன்னி நிலம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது.  டீடெயில்கள் தான் உங்கள் பலம். இந்தக்கதையில் அவை குறைவாகவும் நிகழ்ச்சிகள் அதிகமாகவும் இருக்கின்றன. பரபரப்பாக கதை நகர்கிரது. இந்தக்கதையை நீங்கள் என்ன நோக்கில் எழுதினீர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது

சிவம்

அன்புள்ள சிவம்,

நான் இரு ராணுவ நண்பர்களுடன் தங்கியிருக்கிறேந்- முகாமில். கடைசியாக நண்பர் கமான்டன்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக்கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சம் காதல். இதை எழுதி பல வருடங்கள் ஆகின்றன

நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான். சிலசமயம் ஆழமான மன எழுச்சி. சில சமயம் ஆழமான தேடல். சிலசமயம் வெறும் சலிப்பை வெல்ல பகல்கனவுகளை உருவாக்கிக் கொள்ளவும் நான் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்ற எண்ணம் எனக்குண்டு.  நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல்புனைகதைகள் எழுதியதும் அதனால்கேயெ. திரில்லர் எழுதவேண்டும் என்ற ஆசை உன்டு. அதேபோல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன் தான்.

சமீபத்தில் என் முதல் தொகுதி 1991 ல் வந்தபோது அதற்கு சுஜாதா எழுதியிருந்த மதிப்புரையை பார்த்தேன். அதில் இலக்கியத்தின் எல்லா வகையிலும் முயல்பவர் என என்னைப்பற்றிச் சொல்லியிருந்தார். அந்த பாராட்டு எனக்கு இப்போது மிகவும் பிடித்திருக்கிறது
ஜெ
அன்புள்ள ஜெ,

கன்னிநிலம் நாவலில் துப்பாக்கிகள் , ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைச் சொல்கிறீர்கள். அவற்றில் எந்த அளவுக்கு தகவல் கச்சிதம் உள்ளது?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

நிலம் குறித்த சித்தரிப்புகள் சரியாக இருக்கும். அவை மட்டும்தான் நம்பகமானவை.. மிச்சமெல்லாம் செவி வழி, தாள் வழி அறிதல்கள். புரிதல் பிழைகளும் இருக்கும். காரணம் எனக்கு நேரடி அனுபவம் இல்லாத தளம் இது. ரொம்ப விரிவான ஆராய்ச்சியும் செய்யவில்லை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

தேவதேவனின் இந்தவரி ஸ்டீஃபன் ஃபிலிப்பின்’ ‘Marpessa’   கவிதையின் வரிகளை நினைவுறுத்தியது.

ஓப்லா விஸ்வேஷ்.

அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!

The history of a flower in the air,
Liable but to breezes and to time.
As rich and purposeless as is the rose:
Thy simple doom is to be beautiful.

முந்தைய கட்டுரைவிஐ: கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 6