எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை என்னைத் தனிப்பட்டமுறையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எழுதுபவை. பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்து அது முடிந்தபின் ஓரிரு சொற்கள் பேசித் திரும்புகிறார்கள். பலர் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சந்திக்கத் தயங்கித் திரும்பிவிடுகிறார்கள்.
நண்பர்களைச் சந்திப்பதற்காக மட்டுமே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலென்ன என்று பேசிக்கொண்டோம். முதல் நிகழ்ச்சியைத் திருச்சியில் நண்பர் விஜயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார். 28 ஏப்ரல் அன்று
இந்நிகழ்ச்சியின் இயல்புகள். திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோ பேசும்தலைப்போ கிடையாது. பொதுவாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அதாவது சும்மா ஓர் அறையில் அமர்ந்து அறிமுகம் செய்துகொண்டு பேசிக்கொண்டிருத்தல். என்னிடம் நண்பர்கள் சொல்லவிரும்புவதைச் சொல்லலாம். அதிகமானபேர் பங்கெடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். ஆகவே ஓர் எளிய உரையாடலாகவே அமையும்.
நிகழ்ச்சிக்கு நேர அளவு கிடையாது. 28 ஆம் தேதி காலை நான் திருச்சி வருகிறேன். 29 காலை சென்னைக்குச்செல்வேன். அதுவரை நேரம் உண்டு
இந்த உரையாடலில் சினிமா, அரசியல் பற்றி அதிகமாக பேச்சு தேவையில்லை என நினைக்கிறேன். அவைதானே வழக்கமான பேசுபொருட்கள். பிறவற்றைப்பற்றிப் பேசலாம். முன்பதிவோ தகவலோ தேவை இல்லை.
நட்புக் கூடலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெகு அருகில் உள்ள ஹோட்டல் பெமினாவில் ஒரு அறை ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
நாள் 28-4-2013
இடம் ஹோட்டல் பெமினா, திருச்சி