ஓழிமுறி மேலும் ஒரு விருது

ஒழிமுறிக்கு மேலும் ஒரு முக்கியமான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரைத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு [Kerala film Producers Associations ] முப்பபதாண்டுகளாகத் திரைவிருதுகளை வழங்கி வருகிறது. இவ்வருடத்தின் சிறந்த படமாக ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

சிறந்த நடிகர் விருதை ஒழிமுறிக்காக லாலும் அயாளும்ஞானும் தம்மில் , செல்லுலாய்ட் இருபடங்களுக்காக பிருத்விராஜும் பகிர்ந்துகொள்கிறார்கள். சிறந்த இரண்டாவது படம் உஸ்தாத் ஓட்டல். சிறந்த இயக்குநருக்கான விருது அயாளும்ஞானும் தம்மில் படத்துக்காக லால் ஜோஸுக்கு. சிறந்த நடிகை மம்தா மோகன்தாஸ் [ அரிகே]

சிறந்த குணச்சித்திர நடிகர் பிரதாப் போத்தன் [ அயாளும் ஞானும் தம்மில்] சிறந்த குணச்சித்திரநடிகருக்கான சிறப்பு விருது ஃபகத்ஃபாசில் [22 ஃபீமேல் கோட்டயம்]

கமல்ஹாசனுக்குத் திரை ஆளுமைக்கான சிறப்பு விருது அளிக்கப்படுகிறது

முந்தைய கட்டுரைவிருது [சிறுகதை]
அடுத்த கட்டுரைபடைப்பியக்கம் இரு கடிதங்கள்