ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி

இசை விமரிசகர் ஷாஜி வாசகர்களுக்கு தெரிந்தவரே. அவரது ‘இசை பட வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொடர் உயிர்மை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு
நட்சத்திர பதவியையே அவருக்கு அளித்தது அது. ஷாஜி எனக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குமெல்லாம் நெருக்கமான தோழர்

ஷாஜி விளம்பரத்துறையில் விளம்பர எழுத்தாளராக பணியாற்றுகிறார். அசலான நகைச்சுவை உணர்வு கொன்ட அவரது விளம்பர எழுத்துக்கள் பெரும் புகழ்பெற்றவை. சமீபத்தில் அவருக்கு விளம்பர எழுத்துக்களுக்கு அளிக்கப்படும் பெருமைக்குரிய ‘பெப்பர்’ விருது அளிக்கப்பட்டுள்ளது.

நண்பர் ஷாஜி எழுதிய கட்டுரைகள் ‘சொல்லில் அடங்காத இசை ‘ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘சொல்லில் அடங்காத இசை’  புத்தகத்தின்
அறிமுக விழா ஏப்ரல் 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு
மைலாப்பூரில் உள்ள சிதம்பரம் செட்டியார் பள்ளியின் சிவகாமி பெத்தாச்சி
கலையரங்கில் நடை பெற உள்ளது. மெஹ்தி ஹஸன் ரசிகர் அமைப்பும், உயிர்மை
இதழும் இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன.

சிறப்பு அழைப்பாளர்கள் :
எம்.எஸ்.விஸ்வநாதன் (திரைப்பட இசையமைப்பாளர்)
P.B.ஸ்ரீநிவாஸ் ( திரையிசைக் கலைஞர்)
நாஞ்சில் நாடன் (எழுத்தாளர்)
பிரபஞ்சன் (எழுத்தாளர்)
எஸ்.ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)
மனுஷ்யபுத்திரன் (கவிஞர், ‘உயிர்மை’ இதழ் ஆசிரியர்)
ரமேஷ் விநாயகம் (திரைப்பட இசையமைப்பாளர்)
ரோகிணி (திரைப்பட நடிகை)
கார்த்திக் (திரைப்படப் பாடகர்)

விழாவில் திரையிசைப் பாடகர் ஸ்ரீநிவாஸ் ‘மெஹ்தி ஹஸனின்’ கஸல் இசை
நிகழ்ச்சியை வழங்குகிறார்.

*

தமிழில் கஸல் என்ற இசைப்பாடல் வடிவம் போதிய அளவுக்கு அறிமுகமானதல்ல. செவ்வியலிசையின் நுட்பமும் மெல்லிசையின் உணர்ச்சிகரமும் கொண்ட உருது இசை வடிவம் அது. ஷாஜி எழுதிய முதல் கட்டுரையே கஸல்மேதை மெஹ்தி ஹாஸனைப்பற்றியது. பிரபல திரைப்பாடகரான ஸ்ரீனிவாஸ் சமீபகாலமாக மிகச்சிறாந்த கஸல் பாடகராக புகழ்பெற்று வருகிறார். கேரளத்து நகரங்கலில் அனேகமகா மாதம்தோறும் அவரது கஸல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நூலறிமுகத்தை ஒட்டி ஸ்ரீனிவாஸ் பாடும் ஒரு கஸல் மேடைப்பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகமப்ட்சம் முந்நூறு பேர் அமரக்கூடிய அரங்கு ஆகையால் முன்னரே வருகை உறுதி செய்வது நல்லது. இசைரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத மாலைநேரமாகவும், தமிழ்நாட்டு இசைவரலாற்றில் கஸல் புத்துயிர் கொண்டு எழுவதற்கான தொடக்கமாகவும் இந்நிகழ்ச்சி அமையக்கூடும்

12 ஏப்ரல் 2008
சனிக்கிழமை மாலை 6 மணி
சிவகாமி பெத்தாச்சி கலையரங்கு
சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகம்
179,லஸ் சர்ச் சாலை
மைலாப்பூர்
சென்னை – 4
Ph:24671441

[email protected]

ஷாஜி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை 

http://jeyamohan.in/?p=173

முந்தைய கட்டுரைமதமும் பூசகர்களும்
அடுத்த கட்டுரைஜெயமோகன் நூல்கள் – அறிவிப்பு