கமகம்

ஜெ,

இங்கே கமகம் குறித்து ஒருவர் பி.ஹெச்.டி. செய்துள்ளார். சாத்துப்படி வாங்கியாகிவிட்டது. மாப்பு கேட்டு ஓடி வந்துருக்கேன். இவர் மிகவும் பெரிய லெவல் மேலும் வித்வான் எஸ்.ஆர். ஜானகிராமனின் மருமகளும் கூட. அவர் பேசிய லெக்சர் ஒன்று தான் எனக்கு ரெபரன்ஸ் ஆக இருந்ததும் கூட. மிகவும் பெரிய ஆராய்ச்சி. இதுவெல்லாம் வெளியே வரமாட்டேன் என்கிறது. இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள் போலும். எனக்கு இத்தனை நாள் தெரியாது. தர்ம சாத்து சாத்திவிட்டர்கள். கமகம் கட்டுரையில் எனக்குத் தெரிந்தே நிறைய சொற்பிழைகள் இருக்கிறது. ப்ரிசிஷன் இல்லை. இது ஒரு மிக சாதாரண கட்டுரையே. இவரது ஆராய்ச்சி பேப்பர் கீழே கொடுத்திருக்கிறேன். முடிந்தால் படித்துப்பாருங்கள். நண்பர்களுக்கும் பகிரலாம். உபயோகமாக இருக்கும்.

ஆராய்ச்சி பேப்பர்: http://musicresearch.in/categorydetails.php?imgid=70

நன்றி
ராமசந்த்ர சர்மா

முந்தைய கட்டுரைஆய்வும் மேற்கும்
அடுத்த கட்டுரைஇப்படி இருக்கிறார்கள்…