தலைவா!
அமெரிக்கா-வாழ் தமிழர்களுக்குத் தாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்ற தரிசன விவரங்கள் புல்லரிக்கின்றன! உங்கள் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்து புல்லரித்து வாயடைந்து நிற்கின்றேன்!
ஒரே குறை என்னவென்றால், உங்களை தரிசிக்க ஆவலாக, `காதலாய்க் கசிந்து’ருகி நிறைய (அசல்) `தேசி’கள் இங்கு பாரத தேசத்திலேயே உள்ளோம் – எங்களுக்காக எப்போது எழுந்தருளப் போகிறீர்கள்?! பின்வருமாறு ஒரு நிகழ்ச்சி நிரல் அடுத்த மாதம் போடுங்களேன்:
அக்டோபர் 1` – மந்தைவெளி
அக் 2 – சைதை
அக் 3 – அண்ணா நகர் முதல் தெரு
அக் 4 – அண்ணா நகர் கிழக்கு குறுக்கு சந்துகள்
அக் 5 – பெரம்பூர் ரயில் நிலையம்…
சும்மானாங்காட்டியும் – உள்ளுள்ளாக் கட்டிக்கு!
பயணத்தை அனுபவியுங்கள்!
அன்பு
வெ.சரவணன்
அன்புள சரவணன்,
செய்யலாம். ஆனால் ஜனங்கள் சிட்டுக்குருவி லேகியம் விற்கிறவர் என்று நினைத்துக்கொண்டுவிடுவார்களே[ கண்ணீரோடு கேட்கிரேன். நான் உங்கப்பா மாதிரிடா..தயவுசெய்து சொன்னா கேளுடா.எடுடா கைய!]
ஜெ
அன்புள்ள ஜெமோ
அமெரிக்காவிலே நீங்கள் நைட் கிளப்புகளுக்கெல்லாம் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிரதே. அருண்மொழி ஆச்சியிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா?
கருணா
அன்புள்ள கருணா
நைட் கிளப்புகளுக்குப் போகவில்லை. வதந்திகளை நம்பவேண்டாம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.
இப்படித்தான் ஜெர்மனிய பிஷப் அமெரிக்கா போனார். போகும்போதே எச்சரித்தார்களாம், அமெரிக்க ஊடகங்களை பற்றி. அவரும் வாயை மூடிக்கொண்டே இருந்தார். ஒருவர் கேட்டார்”பிஷப் அவரக்ளே அமெரிக்க நைட் கிளப்புகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” பிஷப் ”அமெரிக்காவில் நைட் கிளப்புகள் உள்ளதா என்ன?” என்றார் அப்பாவியாக
மறுநாள் கொட்டை செய்தி ” ஜெர்மனிய பிஷப் அமெரிக்க நைட்கிளப்புகளைப்பற்றி விசாரித்தார்”
ஜெ
ஜெ..
மீசையில்லாமல், லேசாக உம்மென்று இருக்கும் உங்கள் முகத்தில் ஒரு அரசாங்க உயரதிகாரிக் களை வந்துவிட்டது. லேசான வயித்துக் கடுப்பு போல் முகம் காட்டுவது உயரதிகார பாவங்களுள் ஒன்று.
ஆபீசில் உங்களை ப்ரமோட் பண்ணிறப் போறாங்க.. ஜாக்கிரதை.
பாலா
கடுகடுவென்று இருந்தால் அதிகாரி ஆக முடியாது மக்கள் தொடர்புக்கு விட்டுவிடுவார்கள். வீடு வீடாக அலையவெண்டும்
ஜெ