அன்புள்ள ஜெ,
FDI இதன் காரணம் பற்றி சில கேள்விகள்,மற்றும் மூன்று வருடங்களாக அலைந்து பல விவசாயிகளிடம் பேசிய அனுபவத்தில் இருந்தும் , சில மாற்று விவசாய நண்பர்களுடன் வேலை செய்து , நாற்று நட்டு , அறுவடைக்கு சென்றுள்ளேன் என்ற தார்மீக அடிப்படையில் இருந்தும் சில புரிதல்கள் .
“கண்டிப்பாக விவசாய மக்களுக்கு லாபம் இல்லை , வேறு தொழிலுக்கு செல்வதுதான் அவர்களது கனவு என்ற உங்களது கருத்திற்கு மாற்றுகருத்து இல்லை ” , ஆனால் வாழ்வாதார பிரச்சனைக்கு fdi யும் ஒரு தீர்வு என்ற கருத்திற்கு சில எதிர்வினைகள்.
1 நீங்கள் கூறுவது போல இதனை நமது அரசாங்கம் நினைக்கவில்லையே,அவர்கள் கூறிய காரணம் , இது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்றுதான் கூறுகிறார்கள் , அதில் இருந்தே இது ஒரு சமரசத்திற்கு உட்டபட்ட கூடங்குளம் போன்ற ஒரு மேல் தட்டு அரசியல் மோசடி என்றுதான் நினைக்கிறன்
2 alluwaliya கூறுவது , விவசாயம் 14 % GDP தருகிறது அதனால் 14 % மக்கள் மட்டும்தான் அதில் வேலை செய்யவேண்டும் என்பதிற்கு உகந்தவாறு செய்யப்பட்ட ஒரு அடிக்கல்தான் FDI
3 விவசாயிகள் தங்கள் நிலங்களைத் தரிசு நிலங்களாக ஆக்காமல் இருக்க , சந்தை லாபத்தை மட்டும் நம்பி அவர்கள் விவசாயம் செய்யாமல் இருக்க ஒரு வழி உண்டு , அவர்களுக்கு gaurentee income கொடுத்தால் என்ன ? , Gaurented income அடிப்படைகளை பொருளாதார விதிகளை நாம் ஆராயவேண்டும், எந்த முறையில் கொடுப்பது என்பதனை .
4 இல்லை அதெல்லாம் சரிவராது என்றால், இந்த கேள்வியைப் பார்போம், விவசாயியை தேசத்திற்காக உணவு உற்பத்தி செய்ய யார் தூண்டியது ? அரசுதானே, கம்பு ,சோளம் , கேவுரு என்று செய்தவர்களை , mono cropping,என்ற பெயரில் வெறும் அரிசி மட்டும் செய்யத் தூண்டியது யாருக்காக ? , அதுவும் குறிப்பிட்ட அரிசி வகைகள் மட்டும் . அதனால் gaurenteed income அவர்கள் நிலத்தை,அதன் சூழலைப் பாதுகாப்பதற்காகக் கொடுத்தால் அது ஒரு premium ஆக இருக்கும் என்பதுதான், இதன் மூலம் நாம் விவசாயிகளை சந்தை சுறாவிற்கு இரையாய் ஆகாமல் தடுக்கலாம் , இந்த மார்க்கெட் மாபியாவை தரகர்களை நுகர்வோர் பார்துக் கொள்ளட்டுமே.
நாளை விவசாயி இல்லை தேசத்திற்காக உணவு செய்ததெல்லாம் போதும் நான் எனக்கு மட்டும் செய்வேன் என்று சொன்னால் அது அயோக்யத்தனம் என்று அரசு கூறும் அல்லவா ?.
5 வேறொரு கோணம் , சரி fdi வருகிறது என்று வைத்துக் கொள்வோம் ,நாளை அவர்கள் ” மொன்சாண்டோ போன்ற மேலைநாட்டு, மக்ய்கோ போன்ற உள்ளநாட்டு விதை நிறுவனங்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து ” இந்த வகை சோளத்தில் தான் , இந்த வகை அரிசியில் தான் , இந்த வகைக் கத்திரியில் தான் எங்களால் லாபம் பார்க்க முடியும் , அதனால் விவசாயிகள் அனைவரும் “Bt ” க்கோ அல்லது வேறு ஒரு விதைக்கோ மாறவேண்டும் இல்லை என்றால் லாபம் இல்லை என்றால் கண்டிப்பாக விவசாயி மாறிவிடுவான் என்ன செய்வது ?, இதையெல்லாம் தேவையில்லாத பயம் என்று சொல்லப் போகிறார்களா ? , லாபம் மட்டும் வைத்து விவசாயம் செய்யத் தூண்டினால் fdi ஒரு எளிமையான fix , இல்லை விவசாயம் என்பது ஒரு தேசத்தின் பாதுகாப்பின் ஒரு விஷயம் என்றால் வேறு தொலைநோக்குப் பார்வை மற்றும் பல கேள்விகளை ஆராய்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயம் .
6 நமது உணவுப் பழக்கங்களைத் தீர்மானிக்க மாட்டார்கள் என்று கூறவே முடியாது வால்மார்ட் – மொன்சாண்டோ அதனை நோக்கிய ஒரு பயணம் , கண்டிப்பாக மாற்றமுடியும் . காலையில் கம்பு கேவுரு கஞ்சி குடித்தவனை, பரோட்டா – பீப் , இட்லி – தோசை , செட் தோசை , kellogg’s corn flakes , சண்ட்விச் , என்று பசுமைப் புரட்சி மாற்றவில்லையா ? , food industry doesn’t care about health , health industry doesn’t care about food . இதையெல்லாம் தோழர்கள் பாணியில் திட்டமிட்ட சதி என்று கூறவில்லை , திட்டம் போடத் தெரியாததால் வந்த விளைவு என்று சொல்லலாம் .
.
8 பஞ்சாபில் 2006 ஆம் ஆண்டுஎன்று நினைக்கிறேன் APMC act மாற்றப்பட்டது , நேரடியாக நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து வாங்கலாம் என்று , அப்பொழுது Rallis , CARGILL போன்ற நிறுவங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கினார்கள் , அந்த ஆண்டு கோதுமை விளைவு நாட்டில் அதிகம் இருந்தது , ஆனால் அதே ஆண்டு இநதியா 8 மில்லியன் டன் கோதுமை இரண்டு மடங்கு விலைக்கு இறக்குமதி செய்தது PDS முறைக்கு .
ஒரு புறம் விவசாயத் தற்கொலைக்கு நியாய விலை/ மாபியா சந்தை வணிகம் காரணமாக இருந்தாலும் , அதன் மறுபக்கமும் உண்டு , விதை , உரம் , பூச்சி கொல்லி , சுப்சிடி விவசாய கடன் , கந்து வட்டி என்கிற மாயவலை , விவசாயியை அகலக்கால் வைக்கதூண்டியது , பெரிய நிலச் சுவான்தார்கள் போல் சிறிய விவசாயியும் தனது சிறிய முதலீட்டு சூழலை அழித்து பெரிய கனவு காண ஆசைப்பட்டான், பூச்சிக்கொல்லி , உரம் , விதை விற்றவர்கள் அனைவரும் கோடீஸ்வர்கள்,விளைவை வாங்கி விற்றவர்கள் கோடீஸ்வர்கள்,விவசாயி மட்டும் ஓட்டாண்டி . இந்த வலையில் விழுந்த நிலப் பிரபுக்களும் உண்டு .
இப்பொழுது விதர்பாவில் யவத்மால் என்ற இடத்தில் சிறு கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன் , விவசாயத் தற்கொலை பற்றியது இந்த ஆய்வு , இங்கு ஒரு மாதத்தில் ஒரு tehsil மட்டும் சராசரி 12 விவசாயிகள் தற்கொலை செய்து
கொள்கிறார்கள் இது கடந்த ஆறு வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது , இதன் ஒரு பாகம் நியாய விலை மற்றொரு பாகம் விதை / பூச்சி கொல்லி விதை அரசியல் . ஆய்வு முழமை அடைந்த பிறகு இதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
ஆனால் FDI க்கு எதிராக ஒலிப்பது மாபியாக்கள் மற்றும் அதன் மூலம் பயனடையும் அரசியல் கட்சிகள் அதன் சித்தாந்த மூளை சலவிகள் , அதே போல் fdi சாதகமாக ஒலிப்பது மேலை நாட்டு மாபியாக்களும் , மேலை வணிகத்தின் மூளை சலவைக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள் மட்டுமே , வெகு சில பேர் மட்டும்தான் அதன் நியாய அநியாயங்களை அதன் சர்வதேச அரசியலை விவாதிக்கத் தயாராக உள்ளார்கள் களத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள் . உணவு அரசியலை எளிமைப்படுத்திவிட முடியாது என்பது என் கருத்து, ஆனால் அதன் அடிப்படை விவசாயிகளின் நலனாக இருக்க வேண்டும் . நீங்கள் எழுப்பிய கேள்விகள் மிகவும் முக்கியமான கேள்விகள் மண்டிகள் எல்லாம் மாபியாகளின் கைகளில் இருக்கிறது என்பது எந்த ஐயமும் இல்லை. எனக்கு கண்ணுக்குத் தோன்றுவது எல்லாம் கிராம ச்வராஜ்யம் மட்டுமே .இதனை வைத்துப் பார்க்கும் பொழுது FDI கண்டிப்பாக ஒரே ஒரு தீர்வாக இருக்க முடியாது , சிறிய மீன்களுக்கு பயந்து உணவு அரசியல் என்கின்ற சுறாவிற்கு அழைப்பு விடுத்தால், அவ்வளவு பெரிய வலையையும் பின்ன வேண்டும் , சிறிய மீன்களையாவது வலையில் பிடிக்க முடியும் .
நன்றி
லக்ஷ்மி நரசிம்ஹன் என்கிற லட்சின்
அன்பு ஜெயமோஹன், வணக்கம். சிறுவர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றிய தங்கள் கட்டுரை, குழும விவாதங்கள், மற்றும் கடிதங்கள் அனைவற்றையும் வாசித்தேன். மேலும் எதிர்வினைகள் வரக்கூடும். ஒரு விஷயத்தைத் தங்கள் கவனத்திற்குக் காட்ட விரும்புவேன். சிறுவர்த்தகத்தில் அன்னிய முதலீடு தற்போது இங்குள்ள நிலை காரணமாகவே பெரிதும் வரவேற்கப்பட்டாக வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் காப்பீடு ஓய்வூதியத் துறையில் வெளி நாட்டு நிறுவனங்கள் நமது மக்களின் நீண்ட கால சேமிப்பைக் கையாள்வார்கள். அப்போது அந்த நிறுவனங்கள் முழுகும் பட்சத்தில் நம் மக்களின் உழைத்து சேமித்த பணம் திரும்பி வராது போய்விடும்.
IRDAன் சேவை கண்டிப்புச் சட்டங்கள் வேறு. வெளி நாட்டு நிறுவனம் தனது கொடுக்கல் வாங்கல் மற்று முதலீடுகளால் முழுகுவது IRDAவின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வராது. 2008ல் Lehman Brothers என்னும் அமெரிக்க வங்கி Real Estate Bubble என்று அழைக்கப் பட்ட அடமானத்தை மறு அடமானம் வைக்கும் பரிவர்த்தனைகளால் முழுகியது. அப்போது அதனுடன் வியாபாரமும் அதில் முதலீடும் வைத்திருந்த இந்திய வங்கிகளும் பாதிக்கப் பட்டன. அன்னிய முதலீடு உலகமயமாக்கத்தின் தவிர்க்க இயலாத ஒரு ஷரத்து. ஆயுட் காப்பீடு, ஓய்வுதியம் என்னும் நீண்ட கால முதலீடு செய்வோருக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள நிச்சயமற்றதன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முயல வேண்டும். வல்லுனரும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேறு மாற்று எதுவும் இல்லை.
அன்பு சத்யானந்த்