விஷ்ணுபுரம் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெயமோகன்

விஷ்ணுபுரம் குறித்து வாசகர் துவாரகாநாத் கேள்விக்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள்
அதில் கீழ்க்கண்ட வரி படித்தேன்.

“அது ஓர் எழுத்துவகை. அது ஒரு காலமில்லா வாசிப்பனுபவத்தை அளிக்கிறது”

விஷ்ணுபுரம் போல இன்னொரு படைப்பு நான் படித்ததில்லை. “ஓர் எழுத்துவகை:” என்று கூறியிருப்பதால். அந்த வகையில் வேறு ஏதும் கவனிக்கத்தக்க படைப்புகள் உள்ளதா.

மேலும்,விஷ்ணுபுரம் முதலில் வரும் அந்த பாலைவனக் காட்சி. அது மணிமுடி காலத்திற்குப் பிந்தையது எனக்கொள்ளலாம். அனால் அதே நேரம் மணிமுடியே ஒரு காவிய வாசிப்பாக ஸ்ரீ பாதத்தில் வருகிறது. இது ஒரு பயங்கர self referential / recursive ஒன்று இன்னொன்றை சுட்டி அது மீண்டும் இதனை சுட்டி…வருகிறது…

கவித்துவமாக அது ஒரு உச்சியைத் தொடுவது புரிகிறது…ஆனால் அந்தப் பகுதியை எப்படிப் புரிந்து கொள்வது என்று சரியாகத் தெரியவில்லை…

இது சொல்லிப் புரிந்து கொள்ளக் கூடிய விஷயமா….மற்ற இலக்கியம் படித்து விஷ்ணுபுரம் படித்தால் இன்னமும் ரசிதிருக்கலாமோ…காந்தியின் சத்திய சோதனை…மீண்டும் படிக்கும்போது தான் புதிய திறப்புகள் (அதுவும் நீங்கள் சொல்லி ) ஏற்படுகிறது…விஷ்ணுபுரமும் அப்படித்தானோ….

அன்புடன்
ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்

விஷ்ணுபுரத்தை மிகுபுனைவு [Fantasy] வகையான நாவல் என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் பொதுவாக எந்த ஒரு இலக்கியப்படைப்பும் இப்படிப் பொதுவான அடையாளத்திற்குள் மட்டுமே அடங்கும். அதன் தனித்தன்மை அந்த அடையாளத்திற்கு வெளியில்தான் இருக்கும். விஷ்ணுபுரம் ஒரே சமயம் நவீன நாவலும் ஒரு புராணமும் ஆகும்

விஷ்ணுபுரத்தில் வரும் பாலைவனக்காட்சி ஒரு கனவாக இருக்கலாமெனக் கதைக்குள் வருகிறது. ஒட்டுமொத்த நாவலேகூடக் கனவாக இருக்கலாம் என்றும்

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை
அடுத்த கட்டுரைவெண்கடல் வண்ணதாசன்