பம்பி

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
வணக்கம்.சிறுவயதில் எனது தந்தை ‘ரத்ன பாலா’ என்ற சிறுவர் மலரைத் தொடர்ந்து வாங்கித் தந்தார்.நான் பாடசாலைப் புத்தகத்திற்கு வெளியே வாசிக்கத்தொடங்கியதற்கு ரத்ன பாலாவும் ஈழநாடு பத்திரிகையும் முக்கிய காரணங்களாக அமைந்தன.இன்றைக்கு அப்பாவை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுபவற்றில் வாசிப்புப் பழக்கத்தை அவர் எனக்கு உருவாக்கியது முதன்மையானது.இல்லாவிட்டால் நான் ஒரு வேலைக்கு மட்டும் படித்த கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன்.

இப்பொழுது தமிழ் நாட்டில் ரத்ன பாலா வருகின்றதோ தெரியவில்லை.ரத்ன பாலாவில் பபீனா தீவு என்று ஒரு சித்திரக்கதை இரு இதழ்களில் வெளிவந்திருந்தது.கானுயிர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்ட அக்கதையைப் பலப்பல முறை வாசித்திருப்பேன்.உண்மையில் நானும் அவர்களுடனேயே வாழ்ந்தேன்.இன்றும் மறக்க முடியாத அற்புதமான புனைவுலகு.

பம்பி(Bambi) என்ற மான்குட்டியைப் பற்றிய போத்துக்கேய மொழிப்பாடலைத் தற்செயலாகக் கேட்டேன்.அந்தப் பாடலில் ஏற்பட்ட ஈர்ப்பினால் பம்பி என்ற வால்ட் டிஸ்னியால் 1942 இல் தயாரிக்கப்பட்ட படத்தைப் பார்த்தேன்.எழுபது வருடங்களாகிவிட்டாலும் புதியது போன்றே இருக்கின்றது.படத்தைப் பார்த்த பொழுது நான் மீண்டும் பபீனா தீவு வாசித்த சிறுவனாக மாறிக் காட்டுக்குள் சென்றுவிட்டேன்.மனம் இலேசாக இருக்கிறது.உடனேயே உங்களுக்கு இதை எழுதுகிறேன்.

பாடலிற்கான சுட்டி.
http://www.youtube.com/watch?v=y080lRGVZws

பம்பி படத்திற்கான சுட்டி.
http://www.youtube.com/watch?v=-CEJYgKkqH4&feature=related

ந. சிவேந்திரன்
YouTube – Videos from this email