அஞ்ஞாடி ஒரு கடிதம்

அஞ்ஞாடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவல் அபாரமான ஒரு வாசிப்பு அனுபவம்.
ஆண்டி மற்றும் மாறி என்று இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் இருந்து
தொடங்கும் நாவல். மெல்ல மெல்லப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. நுட்பமான
வாழ்க்கைத் தருணங்கள் , கிராமிய வாழ்க்கையில் கிடைக்கும் அங்கதம்,
இயற்கைக் காட்சிகள், அபாரமான சொலவடைகள். நாவல் முழுதும் லயிக்கும்
பாடல்கள், கவித்துவமான மொழியில் எழுதப்பட்டுள்ள பாடல்கள்.

நாவலின் பலவீனம் அது மாக்ரோ வரலாறுக்குள் செல்லும் இடங்கள் வெறும்
செய்தியாக மாறிவிடுகிறது . நாவலின் முற்பகுதியில் தெரியும் மொழியின்
கவித்துவம் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.அந்தப் பகுதி வறண்டு
தெரிகிறது .

காவல் கோட்டம் முழுவதுமே மொழி மிகவும் சாதாரணமான மொழி . நாவலின் பலவீனம்
சாதரணமான வடிவம். அஞ்ஞாடி நாவலின் பலம் பூமணியின் அபாரமான மொழி,
வாழ்க்கை அனுபவம், எல்லாம் அஞ்ஞாடி ஒரு படி மேல் கொண்டு செல்கிறது .

அசோக் சாம்ராட்

அன்புள்ள அசோக்

நான் இன்னும் முடிக்கவில்லை

பூமணி முதல் இருநூறு பக்கங்களில் அவருக்குரிய உலகில் அற்புதமான வீச்சுடன் வெளிப்படுகிறார். ஆனால் வரலாற்றைச் சொல்லப்போகும்போது இரு பிழைகள். சம்பிரதாயமான இடதுசாரி வரலாற்றுச்சித்திரத்தை சம்பிரதாயமாகச் சொல்லிச் செல்கிறார். அதை மையக்கதையுடன் பிணைக்கவும் முடியவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைகாற்றுக்குவேலி இல்லை
அடுத்த கட்டுரைஆட்டிசம் எளிமையாக உணர