நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அறம் வரிசைக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வலுவான கோட்பாடுகளையும், மனித வாழ்வின் Humbleness ஐயும் ஒரு சேர என்னில் உணர வைத்த படைப்புக்கள். மிகவும் ஆக்கபூர்வமானவை. வாசிக்கும் பழக்கம் உடையவர்களை மட்டுமல்லாது, இன்னும் பல தளங்களை சென்றடைய வேண்டும் என முயன்றதே இந்த ஒலிவடிவம்ஏற்கனவே முயன்றது போல, இம்முறை சோற்றுக் கணக்கு – சிறுகதைக்கு ஒலிவடிவம் முயற்சி செய்தேன்.

http://lpspeak.blogspot.in/2013/02/blog-post.html
தனி மனித மாற்றம், சமூக மாற்றம்……….

இந்த இலட்சியங்களை இலக்கியம் சாதிக்குமா எனும் என் முயற்சியில் இதோ புதிய படைப்புடன் வருகிறேன்.

பசி…. !!! வறுமைப்பசி…..நம்மில் அறிந்தவர்கள் குறைவே….அறிந்தவர்கள் பண்பட்டவர்கள்…. அறியாதவர்கள் அபாக்கியசாலி….ஆம்…. யேசு இதை சொல்கிறார்… ‘பசி தாகம் உள்ளவன் பேறு பெற்றோன்…’ என,ஔவையார் கூட … இடும்பை கூர் என் வயிறே… என சபிப்பார்….

பசி, நமக்கு உலகின் ஒரு பரிமாணம் காட்டும். நம்மை உருவாக்கும், உரமாக்கும்… அந்த உணர்வை ஆழமாய் சென்று உணர இதோ ஒரு வாய்ப்பு….பசி எப்படி ஒரு தனிமனிதனையும் அவன் சார்ந்த குடும்பத்தையும் அதன் போக்கையும் தன்வயப்படுத்துகிறது என ஆழமாக சொல்லப்பட்ட கதை…பாசம், அன்பு, நேசம் கூட பசியால் எப்படி மாறிப்போகிறது என சொல்லும் கதை….

வறுமையை வென்றெடுப்பது எப்படி… என தீர்வும் ஆழமாய் சொல்லப்பட்டிருக்கிறது…இந்த அற்புதக் கதை தந்த ஜெமோவுக்கு நன்றி கூறி, இதைக் கேட்பவருக்கு ஒரு அற்புத அனுபவம் கிடைக்க ஆசைப்படுகிறேன்…

அன்புடன்

லாரன்ஸ் பிரபாகர்

http://lpspeak.blogspot.in/2013/02/blog-post.html