காந்தி சில சொற்கள்

காந்தி உண்ணவிரதம் இருப்பார் எனும் பொதுப் புரிதல் காந்தியவாதம்=உண்ணாவிரதம் என்ற மிக பெரிய சமன்பாட்டினைக் கொடுத்து விட்டது. அல்ஜீப்ரா என்பது (a+b)2= a2+b2=2ab என்ற பொதுப்புரிதலுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடில்லை என்றே நினைக்கின்றேன்.

காந்தியவாதம் = (கூட்டுறவு+சுயசார்பு+எதிர் நுகர்வு )* பொருளாதாரம்+ (சிறிய அளவு+குறைந்த அதிகாரம்) *அரசு + (பன்மை + சேவை)* கலாச்சாரம்

என்ற சமன்பாட்டினை உடைய சமூகமே காந்திய சமூகம் என்று நான் நினைக்கின்றேன். அகிம்சை முறை என்பது இந்த கணித சூத்திரத்தின் கட்டமைப்பின் பாதையாக இருக்க முடியும்.

கேட்கும் பொம்மையை வாங்கிக் கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தையைப் போல உண்ணாவிரதம் இருப்பது என்ன காந்தியம்? அதற்கும் காந்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

காந்தியைத் திட்டுபவர்கள் யாரும் தான் நினைக்கும் சமூகம் எதுவென்றும், அதன் அரசு, பொருளாதாரம், கலாச்சாரம் எதுவென்றும் சொல்லுவதில்லை. பொதுவாக திட்டுவது ஒரு மரபாக ஆகி விட்டது.

இந்திய தேசியம் என்பது ஒரு வெற்று தேசியப் பெருமிதம் அல்ல அது ஒரு puluralistic democratic society என்பதாகவே அணுகப்பட வேண்டும் என்றே என்னுகின்றேன். இதனை எப்படித் தக்க வைப்பது, இதை எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பதே இந்த சமூகத்தின் முன் உள்ள கேள்வி. அதையே ஒரு அறிவு ஜீவியோ, சமூக சேவகரோ, களப்பணியாளரோ முன் வைக்க வேண்டிய சூழல் உள்ளது, உலகமயமாக்கம் இதனைத்தான் கலாச்சாரமாகக் கோருகின்றது.

நிர்மல்.

அன்புள்ள நிர்மல்

காந்தியைப் புரிந்துகொள்ள சில அடிப்படைக்கருதுகோள்கள் தேவை. அவற்றை சுருக்கமாக மூன்று சொற்களில் சொல்லிவிடமுடியும்

1. பன்மைத்தன்மை– எதுவும் பன்மையாக, மையமில்லாததாக இயங்கும்போதே சரியாக இருக்கிறது.

2.சமரச இய்க்கம்– எந்த ஒரு செயல்பாடும் முரண்படும் விசைகள் நடுவே உள்ள சமரசமாகவே இருக்கமுடியும்.

3.பொறுமை – எந்த ஓர் உண்மையான மாற்றமும் அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டே உருவாகும். உடனடியாக நிகழ்வது உண்மையான மாற்றமல்ல

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஈழம் ஒரு கடிதம்