ஆட்சிப்பணித்தேர்வுகளில் தமிழ்

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/new-upsc-regulations-discriminatory-say-experts/article4503319.ece

மக்களாட்சி என்ற பெயரில், திரும்பத் திரும்பப் பெரும்பான்மை மையத்துவமே பல குடுவைகளில் வருகிறது.

25 ஆண்டுகளாக வேளாண்மையைப் பார்க்கும் போது, புரிந்த ஒரே விஷயம் – Diversity. இயற்கையில், பல உயிர்களும் கலந்து, பிணைந்து வாழும் சூழலே, sustainable ஆக இருக்க முடிகிறது. monocropping led to the profit maxmisation, pest infestation, higher cost of crop protection and disaster – this is the order – which is not sustainable.

மையத்துவம் outer societal needs like protection போன்ற தேவைகளுக்கு வேண்டுமெனிலும், de-centralisation and diversity is the only sustainable model.

மொழி ஒரு கலாச்சாரத்தின் குறியீடு. அதை சமூகத்தின் முக்கிய கருவறைகளுக்குள் அனுமதிக்க மறுத்தல் – ஒரு வகைத் தீண்டாமையே.

எனது தனிப்பட்ட வாழ்வில், 92 ஆம் ஆண்டு, சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வில், பாரதி ஏன் பாஞ்சாலி சபதம் எழுதினார் என்பது பற்றிய எனது எண்ணங்கள், பதில் எழுதும் போதே ஒரு சுதந்திரமான கட்டுரையை எழுதிய உணர்வைத் தந்தன. அத்தேர்வுக்காக கம்பராமாயணத்தின் குகப் படலம் படித்தது ஒரு பெரும் மகிழ்ச்சியான அனுபவமும் கூட. இப்போது வந்துள்ள விதிகளின் படி, தமிழ் இளங்கலை படிக்காத ஒருவர் தமிழில் எழுத முடியாது.

practical reasons என்று சொல்கிறார்கள். 2 G யில் அடிக்கப் பட்ட கொள்ளையில் 0.0001% காசு இருந்தால் போதும். காளைச் சாணம். இதற்காக ஒவ்வொரு மொழிக்கும் 10 ஆசிரியர்கள் இருந்தால், அந்த மொழியில் லிபியாவது எதிர்காலத்துக்கு மிஞ்சும்

திரும்பத் திரும்ப, ஒரு மைய நோக்கு அரசின் மீது வெறுப்பு வர இதுபோன்ற, குறுகிய பார்வைகளே காரணம்.

மாறாக, எல்லா மொழிகளிலும் இத்தேர்வை எழுதலாம் என்று ஒரு அறிவிப்பு வந்தால், ஒரு 40-50 கோடியில் நடைமுறைப்படுத்திவிடலாம். ஒரே அறிவிப்பில் எத்தனை கோடி மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை வரவழைக்கும்? ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயிலுக்கு ஆகும் செலவுதான் ஆகும்.

பாலா

அன்புள்ள பாலா

இந்த விஷயம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமென அரசின் செயல்பாடுகள் தெரிந்தவர்கள் எளிதில் ஊகிக்க முடியும்

குறிப்பிட்ட விஷயத்துக்குக் குறிப்பிட்ட நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். மேலதிக நிதி கேட்பது அந்தத் துறை அதிகாரியின் தவறாகவே கொள்ளப்படும். கேட்டாலும் கிடைக்காது. கிடைத்தாலும் கைக்கு வர இருபது வருடங்களாகும்

ஆகவே அவர் ஒரு சிக்கன நடவடிக்கையை மேற்கொள்கிறார். அரசுத்துறையின் எல்லா சிக்கன நடவடிக்கைகளும் செருப்புக்கு ஏற்ப காலைவெட்டும் கதைகள்தான். ஒருமுறை எங்கள் அலுவலகத்தில் சிக்கனநவடிக்கையின் ஒரு பகுதியாக குடிநீர் பிடித்துவைக்கவேண்டாமென முடிவுசெய்தார்கள். செலவில் மிஞ்சியது மாதம் நூறு ரூபாய்!

இந்தப் பரிந்துரை ஓர் அமைச்சர் அல்லது உயர்மட்டக்குழு முன் செல்கிறது. இம்மாதிரி விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கக்கூடிய எவரும் எப்போதும் மேலிடங்களில் இருப்பதில்லை. எவருக்கும் அக்கறை இருப்பதுமில்லை. இதையெல்லாம் கவனித்து இதன் நீண்டகாலபாதிப்புகளை ஊகித்து செயபடுமளவுக்கு ராஜதந்திரமும் மக்கள்மீதான அக்கறையும் கொண்ட அரசியல்வாதி என இப்போது எவரும் மத்திய அரசில் இல்லை. காமராஜ் இருந்திருந்தால் செய்திருப்பபார்.

ஆக , அதுபாட்டுக்கு சட்டமாகிறது. எதிர்ப்பு வலுவாக இருந்தால் வாபஸ் வாங்கப்படும், அவ்வளவுதான்

ஜெ

இது பாரதம் என்னும் துணைக்கண்டத்தின் பல்வேறு கலாச்சாரங்களும் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு சமூகத்துக்கு எதிரான நிலை.

இந்தி படிக்காதே என்று நம் வாழ்வை நாசம் செய்து விட்டார்கள் என்று ஒரு சுலபமான குற்றச் சாட்டோடு இவ்விஷ்யத்தை ஒதுக்கி விடக் கூடாது. முடியாது.

ஏன் தமிழ் வழியில் பெரும் ஆட்சியாளர்கள் வர முடியாதா?? practicality என்னும் சாக்குப் போக்குச் சொல்லி, திரும்பத் திரும்ப மற்ற மொழிகளைப் புறந்தள்ளும் முயற்சி.

இதை எதிர்ப்பது நம் ஓவ்வொருவரின் கடமை என்று எனக்குப் படுகிறது. இணையம் வந்து, தொழில் நுட்பம் வந்து மொழி வேறுபாடுகளின் practical problems ஐ மிகக் குறைத்து விட்டது. செப்பு மொழி பதினூறுடையாள்.. அவளைக் கட்டாயப்படுத்தி, இரு மொழி பேசு என்பது போன்ற முட்டாளதனத்தை என்ன சொல்ல..

இது போன்ற பிரச்சினைகள் எழும்போது தான், எவ்வளவு முட்டாள்தனமாக இருந்த போதிலும், மொழி (மத) அடிப்படைவாதிகள் என்னும் fringe group களின் தேவையை உணர முடிகிறது. உடனே அவர்களை வட இந்தியாவில் பிரிவினைவாதிகள் என்று சொல்ல்லிவிடுவார்கள்.

இது பற்றிய விவாதமும், அறிதலும், முடிந்தால் கொஞ்சம் செயல்பாடும் தேவை என நினைக்கிறேன்.

நன்றி

பாலா

முந்தைய கட்டுரைஆட்டிசம்- சில புரிதல்கள்
அடுத்த கட்டுரைஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்