நிலமிலி

நிலம், குருதி என்றெல்லாம் படித்து வருகையில் சொத்து என்று ஒன்றுமே இல்லாமல் வாழும் ஒரு அமெரிக்கரைப்பற்றிய சுவாரஸ்ய செய்தி ஒன்றையும் படித்தேன். இவர் பெயர் டேனியல் சுயலோ. எவாஞ்சலிக கிறித்துவப் பின்னணி கொண்ட இவர், உலக நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்த தேடலின் முடிவில் கண்டடைந்தது எல்லா மதங்களும் வலியுறுத்துவது எளிய வாழ்க்கையையே என்பதைத்தான், இன்று நாம் வாழும் நுகர்வு போக வாழ்க்கை ஸஸ்டெய்னபிள் அல்ல என்கிறார்.

1987-இல் Peace Corps-காக ஈக்வடார் பழங்குடி மக்களிடம் வாழ்ந்தபோது நவீன பொருளாதாரமும் நாகரீக நுகர்வு வாழ்க்கையும் அவர்கள்மேல் படர்ந்ததையும் அது எப்படி அந்த மக்களின் ஆரோக்கியத்தைப் படிப்படியாகக் குலைத்தது என்பதையும் நேரில் கண்டிருக்கிறார். அந்த அனுபவம் தன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாகச்சொல்கிறார். அப்போது விழுந்த விதை வேர்விட்டு வளர்ந்து 2000-இல் ஒருநாள் கையில் இருந்த காசையெல்லாம் மூட்டை கட்டி போன் பூத் ஒன்றில் போட்டு விட்டு நடக்கத்தொடங்கி கடந்த 12 வருடங்களாக யுடா மாநிலத்தில் மலை குகைகளில் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் வந்து துறவியாய், சாதுக்களில் ஒருவராய் அலைந்திருக்கிறார். இந்தியாவில் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வது சுலபம். நுகர்வு போதை கொண்ட அமெரிக்காவில் கஷ்டம் என்று, கஷ்டமான விஷயத்தைக்கடைப்பிடித்துப்பார்க்க வேண்டும் என்கிற பிடிவாதத்தில் அமெரிக்கா வந்து கையில் பைசா இன்றி இன்றுவரை வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் மிகச்சாதாரண ஒரு விஷயமாகப் பார்க்கப்படும் ஒன்று அமெரிக்காவில் பெரும் செய்தியாக ஊடகங்களில் பேசப்பட்டது.

இவருடைய பேட்டி:

http://www.becomingminimalist.com/the-man-who-quit-money-an-interview-with-daniel-suelo/

அவருடன் ஒருநாள் வாழ்ந்தவரின் குறிப்பு:

http://www.details.com/culture-trends/career-and-money/200907/meet-the-man-who-lives-on-zero-dollars?currentPage=1

அருணகிரி.

முந்தைய கட்டுரைஞாநியும் பரதேசியும்
அடுத்த கட்டுரைபிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்?