ஈழம் இரு எதிர்வினைகள்

அன்பு ஜெயமோகன்,

ஈழம்-கடிதங்கள்” அனைத்தையும் பார்த்த கையோடு உங்களுடனும் உங்கள் வாசகர்களுடனும் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள நான் தயாராகியபொழுது திரு. சம்பந்தர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி எனக்குக் கைகொடுத்தது. நீங்கள், சரவணக்குமார், ராஜ், ஈஸ்வரன், நரேந்திரன் உட்பட உங்கள் வாசகர்கள் அனைவரும் எழுப்பக்கூடிய கேள்விகள் சிலவற்றுக்கு இதில் மறுமொழிகள் இருக்கலாம்:

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/03/130310_sambanthaniw.shtml

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு,

நலம்தானே?

சம்பந்தர் அருமையாக விளக்கியிருக்கிறார்.

நன்றி

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களது ஈழம் பற்றிய கடிதத்தில் வந்த விடயங்கள் மிகவும் ஆச்சரியத்தையும் மகிழ்வையும் எனக்குக் கொடுத்தது. பம்மாத்து காட்டுபவர்கள் மத்தியில் உங்கள் இணையத்தில் உள்ள கடிதம் என்னை மிகவும் தொட்டது .என்னைப் பொறுத்தவரை அவைகள் வைர வரிகள். யார் எழுதி இருந்தாலும் அந்தக் கைகளுக்கு மோதிரம் போடவேண்டும் . தொலைபேசி எடுத்தேன் கிடைக்கவில்லை . உடனே எழுதாவிடில் மறந்துவிடுவேன் என்பதால் இதை அவசரமாக எழுதுகிறேன்

அன்புடன்,

நோயல் நடேசன்

ஆஸ்திரேலியா

அன்புள்ள நடேசன்,

நன்றி

அக்கடிதத்தை எழுதியவர் நரேந்திரன். திண்ணை இணையதளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கீழைதேய விஷயங்கள் அனைத்திலும் ஆழ்ந்த அறிவோடும் ஆராய்ச்சியோடும் எழுதக்கூடிய ஆய்வாளர் அவர்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பின் பெரும்தடை