நிம்மதி

அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும்  அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது
இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று
இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது
தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகால பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.
ஒருவழியாக அவள் என்னை
பெற்று முடித்தாள்
[கல்பற்றா நாராயணன்]
[2,3-3-2013 அன்று ஆலப்புழாவில் நடந்த கல்பற்றாநாராயணன் கவிதையரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை]
கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு
கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
ஈரோட்டில் கல்பற்றா நாராயணன்
கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
சுமித்ரா
சுமித்ரா- கடலூர் சீனு
திருவண்ணாமலையில்…
சில மலையாளக் கவிதைகள்
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?
பத்து மலையாளக் கவிதைகள்
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்
மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
முந்தைய கட்டுரைதான்,பிறன்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65