சோழநாட்டில் பௌத்தம்

முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் தொடர்ந்து சோழநாட்டில் உள்ள பௌத்த தலங்களைத் தேடிப் பயணம்செய்துவருகிறார். அழிந்துபட்ட பௌத்த விகாரைகளையும் பல்வேறு இடங்களில் கைவிடப்பட்டுக் கிடக்கும் புத்தர் சிலைகளையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் அவரது பணி முக்கியமானது. நம்முடைய பண்பாட்டுக்குப் பெரும் கொடை அது.

இவ்வாறு பௌத்த சமண இடங்களைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் முயற்சிகளை நான் இந்தத் தளத்தில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறேன். அந்த ஆய்வுகளுக்கு வாசகர்கள் செய்யும் பதில் மரியாதை என்பது அந்த இடங்களுக்குத் தாங்களும் ஒருமுறை சென்றுவருவதே

ஜம்புலிங்கம் அவர்களின் இணையதளம்