கடல் பற்றி

ஜெ,

கடல்பற்றி எழுதக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் ஒரு கேள்வி. இந்த இணைப்பை வாசியுங்கள். உங்கள் தரப்பில் ஒரு வரி விளக்கம் தேவை என நினைக்கிறேன்

இந்த ரிப்போர்டைப் பாருங்கள் – ‘கடல்’ படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்: டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் போலீஸில் புகார்!

சரண்

அன்புள்ள சரண்

அந்த இணையதளத்தில் நான் சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கும் கீழே காணும் அப்பட்டமான பொய்யை பார்த்தாலே அதன் தரத்தை நீங்கள் ஊகிக்க முடியும்

இந்த சூழலில், படம் தோல்வி அடைந்தற்கு மணிரத்னமே காரணம் என்று அந்த படத்திற்கு கதை தந்து, திரைக்கதையில் இணைந்து செயல்பட்ட ஜெயமோகன் அறிக்கை வெளியிட கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கீழ்த்தரமான அவதூறு இது. பல இணையதளங்களில் இவ்வகையில் எழுதப்பட்டுள்ளது. இணையத்தில் இத்தகைய ஒரு பெரும் கும்பல் கிளம்பியிருக்கிறது. இவர்கள் சினிமாவுக்கு இழைக்கும் அநீதி புறக்கணிக்கக்கூடியதல்ல. சினிமாக்காரர்களுக்கு இவர்தளின் தரம் தெரியும். ஆனால் சினிமா பற்றிய உடனடி பிம்பத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள். சினிமாவை ஒரு கேளிக்கையாகவோ கலையாகவோ அல்லாமல் வெறும் வம்பாக மட்டுமே அணுகக்கூடிய ஒரு பெரும் கும்பலுக்கு இவர்கள் தீனிபோடுகிறார்கள்.

கடல் படத்தின் வணிகம் பற்றிய செய்திகள் பெரும்பாலும் ஊடகப்பொய்கள். அவை மணிரத்னம் மீதான வெறுப்பின் விளைவுகள் மட்டுமே.அதற்குப்பின்னால் சாதிவெறி முதல் என்னென்னவோ காழ்ப்புகள் உள்ளன.

கடல்போன்ற படங்களை வாங்கி மேலும் மேலும் லாபம் வைத்து திரும்பத்திரும்ப விற்கும் ஒரு வழக்கம் இங்குண்டு.அதன் வணிகக் கணக்குகளை படைப்பாளிகள் புரிந்துகொள்ளவேமுடியாது. ஆனால் படத்தின் திரையரங்க வசூல் கணக்கு இது. இது வெளிப்படையானது- ஆடிட் செய்யப்பட்டது

http://superwoods.com/news-id-kadal-27-days-collections-kadali-27-days-collections-28-02-136158.htm#.US8Ap8wX_6U.gmail

ஜெ

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநடைபயணி