முதற்சுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

அவர்களுக்கு வணக்கம். இப்போ தான் ஒழிமுறி பார்த்து விட்டு உங்களுடைய
முதற்சுவை படித்தேன் . எனக்கு ஏனோ கவிதை முழுதும் கண்ணீராகவே தெரிந்தது .

ஒவ்வொரு வரியும் காட்சியாக ஓடிக் கண்ணீராக என் மனதுள் நிறைந்தது . ஒரே முறைதான் படித்தேன் . எல்லாக் கவிதையும் என் ஆன்மா முழுதும் நிறைந்து ஓடி கொண்டிருக்கிறது . அழுது நிறைய நாட்கள் ஆகி விட்டதால் என்னவோ கண்ணிர் தாரை தாரையாய் . முதற்சுவை சுவை எனக்கு முழுதும் கண்ணீராய் . சார் ஒழிமுறி ஒரு சோகக் கவிதை.

ஏதோ எனக்கு மட்டும் ஏதோ கிடைத்தது போல . ஒரு எழுத்தாளன் தனது வாசகனுக்குக் கொடுக்கக் கூடிய உச்சம் இதுதான் என்று நினைக்கிறேன் .

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள திரு ஜெயமோகன்

முதற்சுவை படித்தேன்.

உங்கள் அம்மாவை மிகவும் உள்வாங்கி இருக்கிறீர்கள் என தெரிகிறது.

தவறென்றால் மன்னிக்கவும். சீதை இருந்தது வான்மிகி ஆச்ரமம் என்று நினைக்கிறேன். வசிஷ்டர் ஆச்ரமம் என்பது சரியா??

அம்மா மிகவும் படித்திருக்கிறார். அது உங்கள் ஊனில் கலந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

லெ மிசரெபில் நாவலின் ஆங்கிலப் பெயரை எழுத முடியுமா?? இங்குள்ள நூலகத்தில் தேட விரும்புகிறேன்.

அம்மா எனக்கும் பிற நாவல்களைப் படிப்பதற்கு ஊக்குவிக்கிறார். பெரிய ஆளுமையாக இருப்பார் போல் தெரிகிறது.

அன்புடன்

மாலா

முந்தைய கட்டுரைசமணர் கற்படுக்கை
அடுத்த கட்டுரைஆழ்நதியைத்தேடி-மதிப்புரை