ஹரிதகம் ஓர் இணையதளம்

http://www.harithakam.com

மலையாளக் கவிஞர்களில் முக்கியமானவரான பி.பி.ராமச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹரிதகம் இன்று கேரளத்தில் மிகவும் கவனிக்கபப்டும் ஓர் இணைய இதழ். முழுக்க முழுக்க கவிதைக்காக மட்டுமே இது நடத்தப்படுகிறது. வடிவமைப்பும் சரி உள்ளடக்கமும் சரி எப்போதுமே தரமாக பேணப்படுகிறது.

மலையாளக் கவிதையின் தொனியும் நடையும் மாறிய பின்னரும் இதழாசிரியர்கள் பழைய பாணி கவிதைகளையே விரும்பிப் பிரசுரித்து வந்தமையால் இளம் கவிஞர்களுக்கு தங்கள் கவிதைகளை வெளியிட ஊடகம் தேவையாக இருந்தது. கவிதைக்கான இதழ்களும் இணைய தளங்களும் இவ்வாறு உருவானவையே. இன்று இவ்வகை கவிதைகள் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

ஹரிதகம் இணையதளத்தில் இன்று மலையாளத்தில் எழுதும் முக்கியமான இளம் கவிஞர்கள் அனைவரையுமே காணலாம். என்.ஜி.உண்ணிகிருஷ்ணன், வி.எம்.கிரிஜா, விஷ்ணுபிரசாத், அஜித், அனிதா தம்பி, பி.என்.கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் அலெக்ஸ், மனோஜ் குறூர், பிந்து கிருஷ்ணன், ஜோச·ப், மோகனகிருஷ்ணன் காலடி, கவிதா பாலகிருஷ்ணன்,செபாஸ்டியன், பி.ராமன் ஆகியோருக்கு அவர்களுக்கான இணையப்பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்கவிஞர்கள் தேவதேவன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்களுக்கும் இணைய பக்கங்கள் உள்ளன. இன்றைய மலையாளக் கவிதையின் போக்கைக் காட்டும் எளிமையும் அழகும் கொண்ட கவிதைகள் அதில் உள்ளன.

கவிஞரும் நாடகக்கலைஞருமான ராமசந்திரன் ஆசிரியராக பணியாற்றுகிறார். ‘காணக்காண’ ‘ரண்டாய் முறிச்சது’ ஆகிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவரது பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்ப்பில் இன்றைய மலையாளக் கவிதைகள் , சமீபத்திய மலையாளக் கவிதைகள் [தமிழினி] ஆகிய தொகுதிகளில் வெளிவந்துள்ளன

மலையாள எழுத்துரு அறியாதவர்கள் ஜெகத் உருவாக்கிய இனியன் பக்கம்

http://transliterator.blogspot.com/

மூலம் இந்த இணையதளத்தை தமிழில் படித்துப்பார்க்க முடியும்.

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

சில மலையாளக் கவிதைகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

மலையாளக்கவிதை பற்றி

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

பத்து மலையாளக் கவிதைகள்

பத்து மலையாளக் கவிதைகள்

பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

முந்தைய கட்டுரைஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்