கைதிகள்- கடிதங்கள்

கதையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே கேரளத்தில் கொல்லப்பட்ட மாணவர் ராஜனின் கதை நினைவிற்கு வந்தது.

http://www.jeyamohan.in/?p=25150தந்தையின் நினைவுக்குறிப்புகளின் ஆங்கில மொழியாக்கத்தை சமீபத்தில்தான்
வாசித்திருந்தேன்…

கதை வழக்கம்போல ஜெயின் சிறுகதை.

மூன்று காவலர்களின் பாத்திரங்களும் நுட்பமாகப் புனையப்பட்டிருக்கின்றன.

சிவா கிருஷ்ணமூர்த்தி

தலைமேல் பறக்கும் பறவையைத் தவிர்ப்பது எப்படி?
அது பழந்தின்னும் பறவையன்று
எதையாவது தின்னக்கொடுத்து திருப்திப்படுத்த.
அது பார்த்துக்கொண்டிருக்கும் பறவை.
வரும்போதெல்லாம் விரட்டியடிக்க வழிகளிலெல்லாம் கற்களா இல்லை.
எப்போதாவதுதானே என்றொருகல்
மற்றவர்களெல்லாம் செய்கிறார்களே என மற்றொருகல்
சின்னதுதானே செய்த அச்செயல் என ஒருகல்
மற்றவனை தண்டித்துத் தீர்க்க என்ற ஒன்று
இவ்வுலகவாழ்வில் இதெல்லாம் அவசியம் என்றொன்று
மற்றும்
நண்பருக்குத் துணையென, நமக்கேன் வம்பென,
சுகத்தைக் காணவென, சோம்பித் துயில்வதென
தேடிப்பார்த்தால் தரையெல்லாம் கற்கள்
இரக்கம் காட்டாமல் எடுத்து அடியுங்கள்
ஆனாலும் அது
ஓடி ஒளியாது, உயிரையும் விடாது.
காயப்படுவதால் கத்துமோசை குறையும்.
கவலைப்படாமல் நம் வேலையைப் பார்க்கலாம்.

த. துரைவேல்

அன்புள்ள ஜெ

கைதிகள் அற்புதமான ஒரு கதை. நான் தருமபுரி மாவட்டத்தில் இருந்திருக்கிறேன். நீங்கள் அங்கே பணியாற்றிய அதே காலகட்டத்தில்தான். அன்று ஒருமுறை நாயக்கன் கொட்டாய்க்குச்சென்று அப்பு-பாலன் நினைவிடத்தைப் பார்த்திருக்கிறேன்

கைதிகள் கதையை வாசித்தபோது ஒரு படபடப்பு ஏற்பட்டது. மனசாட்சி என்பதை நான் உடலளவில் உணர்ந்த அனுபவம் அது

ஜெய்ராமன்

முந்தைய கட்டுரைஒழிமுறிக்கு விருது
அடுத்த கட்டுரைகாந்தி–ஈழம்