சமணர் கற்படுக்கை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

திருக்கழுக்குன்றத்தில் இருந்து மேற்கே பொன்விளைந்த களத்தூர் சாலையில் ஐந்து கி மீ தொலைவில் நரப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திலுள்ள ஏரிக்கரையோரம் ஒரு மலைக்குன்று அமைந்துள்ளது. இக்குன்றில் உள்ள ஒரு குகையில் (நரிக்குகை என்று அழைக்கப்படுகிறது) சமண முனிவர்கள் பயன்படுத்தும் கற்படுக்கை உள்ளதாகத் திருக்கழுக்குன்றம் சமணக் கோவிலுக்குப் பூஜைகள் செய்து வரும் நண்பர் திரு. ஜீவகுமார் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நான் நரப்பாக்கம் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு காணப்பட்ட குறியீடுகளின் மூலம் அது சமணப்படுக்கைதான் என்று உறுதி செய்தேன். இது, டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைப் பதிப்பில் நேற்று வெளிவந்துள்ளது. இதன் மூலம், சமணப்படுக்கைகளில் காணப்படும் குறியீடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமணத்தில் பிற்காலத்தில் இணைந்த தாந்த்ரீக மரபின் நீட்சியாக இது இருக்கலாம். புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.

இணைப்பு: http://articles.timesofindia.indiatimes.com/2013-02-11/chennai/37038102_1_jain-temple-yantras-symbols

நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
தளம்: https://sites.google.com/site/tnexplore/

முந்தைய கட்டுரைகுடிக்கு எதிரான போராட்டம்
அடுத்த கட்டுரைமுதற்சுவை-கடிதங்கள்