கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்

நண்பர்களே வரும் மார்ச் 2,3 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் குறித்து ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தவுள்ளோம். அவரின் தமிழ்ப்படுத்தப் பட்ட கவிதைகளை வாசிக்கிறோம், பின் அது குறித்து உரையாடுகிறோம். ஏற்கனவே இதேபோன்று தேவதேவன் மற்றும் யுவன் ஆகியோர் கவிதைகளை முன் வைத்து தனித் தனியே 2 வாசிப்பரங்குகள் நடத்தியுள்ளோம்.

இதில் கல்பற்றா உட்பட ஜெயமோகன்,யுவன்,கலாப்ரியா ,தேவதேவன் , மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சொல்புதிது குழுமம் மூலமாக எல்லோரும் பதிவு செய்து விட்டனர், மீதம் உள்ளது 5 இடங்கள் மட்டுமே. இதில் பங்கு பெற விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம். விதிகள் ஊட்டி முகாமுக்கு உள்ளது போல. உங்களின் வருகை உறுதி செய்யப்பட்டால் தனி மடல் அனுப்பப் படும்.

[email protected] 98659 16970

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் .

முந்தைய கட்டுரைவஹாபியம்- கடிதம்
அடுத்த கட்டுரைகந்தர்வன்