அயன் ராண்ட் – 3

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் அவர்கள் லண்டனில் தத்துவம் பயின்றவர். அவர் பயிலும்காலத்தில் தத்துவத்தில் பெரும் பரவசத்தை உருவாக்கிய ஆளுமை விட்கென்ஸ்டீன். காசிநாதன் அவர்கள் விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தில் உயராய்வு செய்தார். கடந்த முப்பது வருடங்களாக அவருக்கு விட்கென்ஸ்டீன்தான் ஆய்வுப்பொருளாக இருக்கிறார். நாங்கள் ஒரு கிராமத்துப் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். … Continue reading அயன் ராண்ட் – 3