பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது

வரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை , மைலாப்பூரில் விழா நிகழ்கிறது

ஞான ராஜசேகரன், இமையம்,எம்டி.முத்துக்குமாரசாமி, பாரதிபுத்திரன், முருகேசபாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கிறார்கள்

பிரபஞ்சனுக்கு வாழ்த்துக்கள். சரியான விருதுக்காக அமைப்புக்கு நன்றி

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 16
அடுத்த கட்டுரைநீலகிரிப் பழங்குடிகள்