தென்றல் பேட்டி

ஜூலை மாத தென்றல் இதழில் என்னுடைய பேட்டி வெளிவந்திருக்கிறது. தென்றல் பொறுப்பாசிரியர் நான் சென்னையில் ராஜ் பார்க் ஓட்டலில் தங்கியிருக்கும்போது என்னை வந்து எடுத்த பேட்டி. பேட்டி என்பதைவிட சகஜமான ஓர் உரையாடல் என்று சொல்லலாம். அதிலிருந்து அவர் உருவாக்கிக்கொண்ட பேட்டி அது. கீழ்க்கண்ட இணைப்பில் வாசகர்கள் வாசிக்கலாம்

நான் மீசை இல்லாமல் கொடுத்த முதல் பேட்டி என்ற வரலற்றுப்பெருமை இந்தப்பேட்டிக்கு உள்ளது. இது சிந்தனையில் ஏதேனும் மாற்றத்தைக்கொண்டுவந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அதன்பின் தி.ஜானகிராமனைப்பற்றி மைச்சூர் தமிழாய்வு நிறுவனம் எடுக்கும் ஆவணப்படத்துக்காக ஒரு பேட்டி கொடுத்தேன்

 

 http://tamilonline.com/

முந்தைய கட்டுரைசில பயிற்சிகள்
அடுத்த கட்டுரைலோகி.5, தனியன்