பயணத்திற்கு வாழ்த்து

வணக்கம் சார்,
மற்றுமொரு இந்திய பயணத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் பயணம் எனக்கும் ஆனந்தம் அளிப்பதாகவே இருக்கிறது.
‘அருகர்களின் பாதை’ பயணத்தின் போது தாங்கள் சுட சுட பகிர்ந்துகொண்ட விவரணைகளை மிகவும் ரசித்து படித்தேன்.
இப்பொழுது மற்றுமொரு பயணம் என்பதால் உங்களினூடாக இந்தியாவை மற்றுமொரு கோணத்தில் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். இந்த பயண குறிப்புகளையும் தினம்தோறும் எதிர்பார்கின்றோம். உங்கள் பயணங்களின் குறிப்புகள்.. ஒரு புத்தகமாக எடுத்து வரலாமே! அருகர்களின் பாதை குறிப்புகளில் இதை பற்றி எழுதி உள்ளீர்கள். கடந்த வருடமே வருமென எதிர்பார்த்தேன்.

நீங்கள் ஒரு இந்திய பயணத்தில் ஆந்திர(தெலங்காநா!) கரீம்நகர் பகுதியில் உள்ள தர்மபுரி பற்றி எழுதி உள்ளீர்கள். அதை நான் சமீபத்தில் தான் பார்த்தேன். தமிழ்நாட்டு பகுதியில் இருந்து தர்மபுரிக்கு ‘தானமாக’ வந்த பெண்களை பற்றி எங்கள் பத்திரிகைக்கு எழுதலாமென நினைக்கிறேன். தருமபுரி மட்டுமல்ல.. இன்றைய தெலங்கான பகுதி கோதாவரி படுகையில் உள்ள பல பிராமண குடியிருப்புகளில் இது ஒரு ஆசாரமகவே இருந்துள்ளது. மந்தெனா, சென்னுர் பகுதிகளை சேர்ந்தவர்கள் இதை என்னிடம் சொன்னார்கள். அந்த மூதாட்டிகளை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் யாராவது உயிருடன் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான். நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒருவரின் மாமனாரின் தாய் கூட அப்படி தமிழ்நாடு பகுதியில் இருந்து வந்தவர்தானம்! சுமார் 80 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சமீபத்தில் தான் இறந்ததாக அவர் சொன்னார். ஆறுவயதில் தான் அந்த பெண்ணை இங்கு திருமணத்திற்காக அழைத்து வந்து இருக்கிறார்கள். அதற்க்கு பிறகு அவழின் தாய், தந்தை, சொந்தம் என்று எவரும் வந்து பார்த்ததில்லையாம்.. தானமாக கொடுத்ததனாலோ என்னவோ! எப்படி பட்ட வாழ்க்கை பாருங்கள்! இப்படி நூற்று கணக்கான பேர் இருந்திருக்கலாம். அந்த மூதாட்டி கடைசி வரையில் தமிழ் பேசிக்கொண்டு தான் இருந்தாராம்!
இதெல்லாம் எழுதலாமென நினைக்கிறேன். தினசரி பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வார்களா என்பது சந்தேகம் தான். போய்தான் பார்ப்போமே என்று படுகிறது.

தற்போதைய உங்கள் பயணத்தின் வழியே ஹைதராபாத் வந்தால் தெரியபடுத்தவும்! குடும்பத்துடன் வந்து சந்திக்கிறேன்.

மிகுந்த அன்புடன்,
ராஜு.

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு