விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமா ?. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ . சுவாமி சித்பாவனந்தர் விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றிக் கொடுத்த எளிய விளக்கம் .

என்னைப் போன்றவர்களுக்கு ( மரமண்டை ) இப்படி சொன்னால்தான் புரியும் . (http://rkthapovanam.blogspot.no/2012/02/blog-post.html). பல முறை விசிஷ்டாத்வைதம், த்வைதம் பற்றி ஒரு confusion இருந்து கொண்டே இருந்தது . உங்களுடைய துவைதம் கட்டுரையும் மற்றும் கடலூர் சீனு விஷ்ணுபுரம் கடிதத்திலும் (எங்கோ இதைக் கேட்ட நியாபகம் ) படித்து அதனுடன் இதை சேர்த்துப் படித்தபோது ஒரு தெளிவு வந்திருகிறது என்று நினைக்கிறேன் .

” ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருத்தமாக உபயோகப்படுத்தியிருப்பார். குருமகராஜ்(பரமஹம்ஸர்) எப்படி உவமைக் கதைகளைச் சொல்லி வந்தாரோ அதேபோல் பொருத்தமான கதைகளைச் சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவர் சுவாமிஜி. விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலைகளைச் சொன்னவர் பெரிய சுவாமிஜி. ஒவ்வொரு துறையிலும் அத்வைத நிலைக்கு வரும் வரையிலும் ஆனந்தம் கிடையாது. ஐக்கியப்படுத்திக் கொண்ட பின்புதான் முழுமையான ஆனந்தம் கிடைக்கும். இதற்கு சுவாமிஜி சொல்லும் கதை:-
வழிப்போக்கன் ஒருவன் சாப்பாடு கட்டிக்கொண்டு போகிறான். அப்போது அவன் வேறு உணவு வேறு; அது த்வைதம்.
பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து உணவைச் சாப்பிடுகிறான். இப்போது உணவு அவனுக்குள் இருக்கிறது; ஜீரணமாகி அவன்மயம் ஆகவில்லை எனினும் அவனுக்குள் இருக்கிறது; இது விசிஷ்டாத்வைதம்.
உணவு ஜீரணமாகி அவனோடு கலந்துவிடுகிறது; இது அத்வைதம்.
இப்படி சுவாமி விவேகானந்தரின் அறிவுமிக்க போக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் எளிமையான உவமைக்கதை வழியாக சுவாமி சித்பவானந்தர் அரிய உண்மைகளை விளக்கியுள்ளார்.
தமிழே தெரியாத என்னைத் தமிழிலே பேசச் சொல்லி, அன்பினை என்மேலே வாரிக்கொட்டி, என்னைப் பல புத்தகங்கள் எழுதவைத்து, என் மூலமாக அந்தர்யோகங்கள் நடத்துவதற்கும் வாய்ப்புக் கொடுத்து, ஆனந்தமாக இருக்கச் சொல்லிய மகானுக்கு சிரத்தாஞ்சலி.”
-டாக்டர். கே. சுப்பிரமணியம்,
முன்னாள் முதல்வர்,
ஸ்ரீ விவேகானந்தாகல்லூரி,
திருவேடகம்

http://rkthapovanam.blogspot.no/2012/02/blog-post.html.

இப்படிக்கு அன்புடன்
பன்னீர் செல்வம்

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 15
அடுத்த கட்டுரைபயணம்- கடிதம்