நகைச்சுவை:கடிதங்கள்

நன்றி சார், யாரும் இல்லாத நேரம் பார்த்து  தனி அறையில் மனம் திறந்து சிரித்து கொண்டே  வாசித்த  கட்டுரை  விவசாயி ,கடன் ,(அடிகடி நிறைய வரிகளை அசை போட்டாலே சிரிப்பு வருகிறது ).

சில நேரங்களில் ரொம்ப சிரமம் சார்,சவுக்கு , மாடன் மோட்சம் , ஜகன் மித்தையை  போன்ற அந்த அனுபவங்களை விட்டு விலகாத நிலையை அடையும் ஒரு வாசகனுக்கு அருகில் பகிர்தலுக்கு இன்னொரு வாசக நண்பர்  இல்லாதது ,  
Regards
Dinesh nallasivam
அன்புள்ள ஜெ,

கடந்த ஒரு வருட காலமாகத்தான் உங்கள் வலை பதிவுகளை படித்து கொண்டிருக்கிறேன். எதிர்பாராத விதமாக, தங்கள் நாஞ்சில் நாடனைப் பற்றிய “தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்” படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வார்த்தையிலும் நகைசுவை அள்ளி கொண்டு சென்றது. அதை படித்தவுடன் நாமும் அவருடன் பழகாமல் விட்டு விட்டோம் என்கிற வருத்தம்தான் ஏற்பட்டது. நல்ல பதிவு, மனம் விட்டு படித்தேன்.

அன்புடன்
இளங்கோ

இன்றும் உங்களுடைய அய்யப்பண்ணனும் ஆச்சியும் என்ற கட்டுரையை படித்து சிரித்தேன். பத்துமுறைக்கு மேலே படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். உங்களுடைய நகைச்சுவைக்கட்டுரைகளில் அதுதான் மிகச்சிரந்தது என்று தோன்றுகிறது. அமெரிக்கா போய்விட்டு வந்தபிறகு அதைப்போன்ற நகைச்சுவைக் கட்டுரைகள் நிறைய எழுதுங்கள்
ஆர். ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ
உங்கள் நகைச்சுவைக்கட்டுரைகளின் சிறப்பே ஒருமுறை வாசித்தால் தென்படாத நகைச்சுவை அடுத்த முறை வாசித்தால் தெரிவதுதான். நிறைய வரிகள் மிகவும் பாலீஷானவை. விவசாயியை பார்த்து நிலமென்னும் நல்லாள் நகும் என்று ஒரு வரி வருகிறதே அதுதான் உயர்ந்த நகைச்சுவை.  அதேபோல நேர் எதிரான நுட்பமான நகைச்சுவை என்பது நீங்கள் எழுதும் பேச்சுகளில் வருவது. உதாரணமாக ‘கார்த்திகை மாசம்போலல்லா இருக்கும். நாயக் கொண்டாட்ந்து விட்டா ஏற ஆரம்பிச்சிரும்’ என்ற வரி. இப்படி எழுதுவதற்கு அதற்கான வாசிப்பு தேவை. கலாச்சார ஆராய்ச்சி தேவை. உங்கள் மாஸ்டர்பீஸ் எல்லாமே இந்த நகைச்சுவைக் கட்டுரைகளில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்
சுவாமி

நகைச்சுவை:மேலும் கடிதங்கள்

நகைச்சுவை:கடிதங்கள்

 

  • எங்கும் குறள்
  • ஆலயம் தொழுதல்
  • நகைச்சுவை:கடிதங்கள்
  • நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்.
  • முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 6
    அடுத்த கட்டுரைபாலகுமாரன்,ஒருகடிதம்