கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என்பது உறுதி, எனவே கேட்கத் தேவையில்லை! இடைவிடாத உங்கள் பயணங்களுக்கு இடையில் எப்படி எழுத முடிகிறது, குடும்பப் பொறுப்புகளையும் கவனிக்க முடிகிறது? You rock! Secret of your energyக்கு ஒரு சமையல்குறிப்பு கட்டுரை தேவை!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களை ‘வாழும்’ கணங்களாக மாற்ற எண்ணிப் ‘பண்படுதல்’,’ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டையும் வாசித்து முடித்தேன். எனது 37 வருட வாழ்க்கையில் இதுவே முதல் வாசிப்பு அனுபவம் (பாடப் புத்தகங்கள், வார இதழ்கள் தவிர).

‘பண்படுதல்’ உங்கள் வலைப்பக்கத்தில் படித்த கட்டுரைகளின் தொகுப்பு தான் என்றாலும் விலையில்லாமல் படித்த குற்ற உணர்ச்சியை ஒழிக்க சரியான வழி..:-) வலைப்பக்கத்திலேயே இரண்டு மூன்று முறை வாசித்த கட்டுரைகளைத் திரும்ப வாசித்தேன், கட்டுக்கடங்காத சக்தி கொண்ட எழுத்து, surreal experience! எனக்கென்னவோ, வலைப்பக்கத்தில் படிப்பது எளிதாக இருந்தது. புத்தக வடிவில் அடைத்து வைத்த அச்சில் படிப்பது கண்களுக்குப் பெரும் பாடாக இருந்தது. எலெக்ட்ரானிக் வடிவில் உங்கள் நூல்களை மாற்றுவது Kindle போன்ற book readers/tabletsல் வாசிக்கும் நண்பர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும். NHM/கிழக்கு – பத்ரி போன்றவர்கள் தமிழில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தால் நல்லது.

’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை என் முதல் நாவல் வாசிப்புக்குத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அதன் எளிய நடை. வாசித்து முடித்த பின் தான் உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்து புளிய மரம் பற்றி என்ன சொல்லி இருக்கிறீர்கள் என தேடினேன். http://www.jeyamohan.in/?p=28101 பக்கத்தில் வாசகர் குறிப்பிட்டிருந்த அதே அனுபவம் தான் எனக்கும் நேர்ந்தது. உங்கள் பதிலை இப்போது தான் படிக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் நீங்கள் பரிந்துரைத்த மற்ற நூல்களை வாங்குவதற்கு முன் உங்கள் நவீன தமிழ் இலக்கிய அறிமுக நூலை வாங்கத் திட்டம்!

பணிவன்புடன்,

லட்சுமணன்

அன்புள்ள லட்சுமணன் அவர்களுக்கு

நேரத்தை மிச்சப்படுத்த மிகச்சிறந்த வழி அதை வீணடிக்காமலிருப்பதே.

நவீனநாகரீகம் வளர வளர பொழுதுபோக்கு அதிகரிக்கிறது. பொழுதுபோக்கின் பிரம்மாண்டமான வளர்ச்சி ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு எதிராக இருக்கிறது. எல்லா வகையான பொழுதுபோக்குகளையும் முழுமையாகவே நிராகரித்துவிடுவதுகூட ஒரு உண்மையான செயல்பாட்டாளனுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறேன்.

புளியமரத்தின் கதை கதையளவில் எளியது. குறியீடாக வாசித்தால் விரிவது

ஜெ

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 11
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 12