தமிழர்களின் மொழிப்பற்று

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

தாய்மொழியை நேசிப்பதில் மற்ற மாநில மக்கள் தங்களை விட உயர்ந்து நிற்கிறார்கள் என்ற (தவறான!) எண்ணம் எல்லாத் தென்மாநில மக்களிடமும் காண்கிறேன். இதைப் பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவல்.

பணிவன்புடன்,

லட்சுமணன்

http://www.maalaimalar.com/2012/12/30110023/learn-to-love-our-mother-tongu.html

அன்புள்ள லட்சுமணன்,

இதை மலையாளிகளும் சொல்வதை கவனித்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு வகையான நம்பிக்கை. சாதிமனப்பான்மை உடையவர்கள் தங்கள் சாதி தவிரப் பிற சாதிகள் ஒற்றுமையாக இருப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்

ஆனால் இதில் ஓர் அரசியல் உள்ளடக்கம் உள்ளது . இந்தியாவில் வேறெங்காவது ‘தமிழ்வாழ்க!’ என அரசு செலவில் எழுதி வைத்திருப்பதைப்போல மலையாளம் வாழ்க கன்னடம் வாழ்க என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மொழிவெறியை ஓர் அரசியல் உத்தியாகக் கையாண்டு வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்த வரலாறுள்ள மாநிலம் தமிழ்.

பிற மாநிலங்களில் குறுகிய மாநில வெறி, மொழி வெறி ஆகியவற்றைக் கிளப்ப நினைக்கும் அரசியல்வாதிகள் தமிழகத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டுவது இதனால்தான்

ஜெ

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே படங்கள்
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 8