ஐயா தாங்கள் ஏன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்வது இல்லை
சசீந்திரன்
அன்புள்ள சசீந்திரன்,
முக்கியமான காரணம் அங்கு நான் ஒன்றும் பெரிதாகச் சொல்வதற்கில்லை என்பதுதான். தொலைக்காட்சியில் தோன்றுவதைப் பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறேன். நண்பர்களின் வற்புறுத்தலால் சிலமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதன்மை விருந்தினராகப் பங்கெடுத்தேன். ஆனால் அது பற்றி எனக்கு ஆர்வம் மேலும் குறையவே அது வழிவகுத்தது
எழுத்துதான் என் ஊடகம்.மேடையும். தொலைக்காட்சி அல்ல. தொலைக்காட்சியில் தொடர்ந்து தோன்றுவதன் வழியாக எழுத்தாளனின் பிம்பம் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுகிறதென நினைக்கிறேன்
ஜெ