நித்யாவின் கையெழுத்து

நான் காகிதங்களைப் பாதுகாப்பவனல்ல. என் வழியாக சமகால வரலாறு ஓடிச்சென்றிருப்பதை இன்று தாமதமாகவே உணர்கிறேன். பல முக்கியமான வரலாற்றுமனிதர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நூல்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

நித்யா எனக்கு இருபது கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எவையும் என்னிடமில்லை. இன்று ஒரு நண்பர் நித்யா கையெழுத்திட்ட ஒரு நூலின் நகலை அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தைபபார்க்கையில் ஒரு பெரும் மன எழுச்சியை அடைந்தேன்.

முந்தைய கட்டுரைம.பொ.சி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 20