மீண்டும் ஓர் இந்தியப்பயணம்

வருடம்தோறும் ஜனவரியில் ஓர் இந்தியப்பெருநிலம் வழியாக ஒரு நீண்ட பயணம் மேற்கொள்வது ஓரு வழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. சென்றமுறை சமண ஆலயங்கள். இம்முறை இயற்கைக்குகைகள்.

7-1-2013 அன்று பெங்களூரில் இருந்து கிளம்புகிறோம். ஏழுபேர் ஒரு கார். ஆந்திரத்தின் குகைகள் வழியாக சட்டிஸ்கர் சென்று ஒரிசா வழியாக திரும்பி வருகிறோம். இயற்கையான குகைகள் மட்டுமே இலக்கு. வழியில் வேறு இடங்கள் இருந்தால் தவறவிடமாட்டோம்

சென்றமுறைவரை அன்றன்றே பயண அனுபவங்களை எழுதிவந்தேன். இம்முறை முடியுமா என்று பார்க்கிறேன்

முந்தைய கட்டுரைஅவன் இவன் என்பது…
அடுத்த கட்டுரைஅகம் மறைத்தல்-கடிதம்