விவசாயிகள்:கடிதங்கள்

விவசாயிகள் தற்கொலைக்கு பல காரணிகள் :

1. உலகெங்கும் பல பணகார நாடுகள் மிக மிக அதிகமாக தம் விவசாயிகளுக்கு
மான்யம் வழங்குவதால் விவசாய விலை பொருட்க்கள் விலை மற்ற பொது விலைவாசி
அளவுக்கு கூடவில்லை. முக்கியமாக பருத்தி. நம்மால் அந்த அளவிற்கு மானயம்
அளிக்க முடியவில்லை. ஊழல் வேறு பெரும் பகுதி மானியத்தை அபகரிக்கின்றது.

2.நில சீர்திருத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு
துண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்
குறைவானது.  முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக
பெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of scale and
minimum farm size..

3.இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ்
பொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல
கோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை
வாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான்
நடந்தது. The bulk of the population migrated gradually from farming to
manufacturing and finally to service sector, unlike
India.

4.அர‌சின் பற்றாக்குறைகளால்  ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து
விலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை
அதிகம்.

5.அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும்
பொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்
ஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌
வேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.

6.இன்னும் ப‌ல‌ சிக்க‌லான‌ கார‌ணிக‌ள்….

Also pls see :

http://businesstoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=5544
UP farmers mint it big


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்

Chennai – 96

http://nellikkani.blogspot.com

http://athiyamaan.blogspot.com

http://athiyaman.blogspot.com

 

 

அன்புள்ள அதியமான்,

 

விவசாயம் நஷ்டமானதாக ஆக முக்கியமான ஒரு காரணம் விளைபொருட்களுக்கும் அவற்றை பண்படுத்தும் இடத்துக்கும் அவற்றின் நுகர்விடத்துக்கும் இடையே உள்ள தூரம். இதன் விளைவாக போக்குவரத்துச் செலவு உற்பத்திச்செலவை விட அதிகமகா ஆகிறது. இதை காந்தியும் பின்னர் ஜெ.சி.குமரப்பாவும் விரிவாகவே பேசியிருக்கிறார்கள். ஆனால் மகாலானோபிஸின் பொருளாதாரம் சாலைகள் அமைத்தால் எல்லாம் சரியாக்விடும் என எண்ணியது

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

விவசாயிகள் கட்டுரையை வாசித்து சிரிக்கவும் சிரிக்காமல் இருக்கவும் முடியாமல் துன்பப் பட்டேன். நீங்கள் எழுதும் மற்ற கட்டுரைகளில் ஒரு பகடி இருக்கும். அதெல்லாம் சிரிப்புக்கு நல்லது. ஆனால் இதைப்பற்றி சிரிக்கலாமா என்றே சந்தேகம் வந்துவிட்டது. சோறுபோடுகிறவன் சாகிறான். நாம் வளர்ச்சியைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்…. இந்தியக் குற்றவியல் சட்டம்தான் யார் விவசாயி என்று தீர்மானிக்கிறது என்ற வரி ஒரு வேதனையான உண்மை. இதை வழக்கறிஞராக நானே கண்டிருக்கிறேன்

 

குமாரசாமி நல்லையா

 

அன்புள்ள குமாரசாமி

 

1880ல் நாகர்கோயிலை மையமாக்கி செயல்பட்ட லண்டன் மிஷன் சபை மார்த்தாண்டத்தில் நெல்விவசாயம்செய்தார்கள். விரிவான கணக்குகளை பதிவுசெய்திருக்கிறார்கள். அதன்படி நெல்விவசாயம் பலத்த நஷ்டம். அப்படியானால் அது எப்படி நீடித்தது? அதில் ஈடுபட்ட மக்களுக்கு மிகக் குறைவான கூலி கொடுத்ததன் மூலமும் அதன் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஊதியமில்லாமல் உழைத்ததன் மூலமும் விவசாயத்துக்கான துணைப்பொருட்களையும் தாங்களே உற்பத்த்செய்ததன் மூலமும்தான்.

 

இன்றுவரை நாம் இந்த நிலையைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,

மிக பிரமாதம் சார்  ,நல்லா உணர்ந்து சிரிதேன். 

 யாரோ எழுதிய மேற்கோள் ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது -“நகைச்சுவை யோடு வெளி வராத எந்த உண்மையும்  சந்தேகத்துக்கு உரியது ” என்று .

கடன் , இப்போது விவசாயி, இந்த மாதிரியான கட்டுரைகள் என்னை அறியாமல் உங்களுடைய  வாசகர் என்ற மன நிலையை தாண்டி உங்களுடைய ரசிகர் என்ற மன நிலையை கண நேரத்தில் ஏற்படுத்தி விடுகிறது ,இது போன்ற கட்டுரைகளை படிக்கும் அனுபவத்தை அடிகடி தருவீர்கள் என்று நம்புகிறேன்

Regards
dineshnallasivam

 

 

அன்புள்ள ஜெயமோகன் ,

உங்களுடய்ய விவசாயிகளைப்பற்றிய அங்கதம் அருமை! 

ஆனால் என்ன கொடுமை இதுதலைப்புக்கீழே  நகைச்சுவை என்று எழுதி

அந்தக்கால ரேடியோ நாடகங்களுக்கு  ‘நகைச்சுவை நாடகம்என்று அறிவிப்பது போல!

 

அன்புடன்

சங்கரநாராயணன்

 

அன்புள்ள சங்கர நாராயணன்

 

ஆரம்பத்தில் இருந்தே அப்படி போடாவிட்டல் சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதும் கடிதங்கள் வந்தன. சமீபத்தில்கூட விளம்பரம் பற்றிய கட்டுரையை நகைச்சுவை என்றே கொள்ளாமல் ஒருவர் கடிதமெ ழுதிய்தை பார்த்திருப்பீர்கள். மன்னிக்கவும் இது நகைச்சுவை மட்டுமேஎன்று கொடுப்பதற்குப் பதிலாக அதைக் கொடுக்கிறேன்

 

மேலும் அதை கிளிக்கினால் பழைய நகைச்சுவைக் கட்டுரைகளுக்குச் செல்லலாம்

ஜெ

விவசாயிகள்

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 16
அடுத்த கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்