கூர்மாவதாரம்

அன்புள்ள ஜெ

சனிக்கிழமை அன்று – லோக்சபா சேனலில் – கூர்மாவதாரம் பார்த்தேன் (படத்தில் தடுக்கி விழுந்தேன்)

காந்தி பற்றி எடுக்கப்பட்ட டிவி தொடரில் காந்தியாக நடிக்கப் புகும் நடிகரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் – சில மெல்லிய புன்னகைக்கும் நகைச்சுவையுடன் – சில அசாதாரண புரிதல்களுடன்.

நிஜமான உச்சமாக – கடைசிக் காட்சி – காந்தி போல் நடிப்பது கூட சுலபமல்ல – மிக உருக்கம்.

பல தளங்கள். என்னுடைய சுருக்கம் சரிதானா என்று கூட தெரியவில்லை .

ஆனால் காந்தி பற்றி விவாதிக்கும் போது எடுத்துக் கையாளப் பட வேண்டிய மிக முக்கியமான திரைப்படம்.

பின்னணி இசையும் குறிப்பிட வேண்டும்

அன்புடன்
முரளி

அன்புள்ள முரளி

திருவனந்தபுரம் திரைவிழாவில் கிரீஷ் காசரவள்ளி அந்தப்படத்தைப்பற்றிப் பேசுவதைக்கேட்டேன். படம் பார்க்கவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைபந்தி
அடுத்த கட்டுரைஅகம்மறைத்தல்-அங்கும்