சுதாகர் ஃபெர்னான்டோ

மதிப்பிற்க்குறிய ஜெயமோகன் அவர்களுக்கு,

என்னை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.துபாயில் வேலை பார்க்கும் ,உங்களை பல மாலை வேளைகளில் உங்கள் வீட்டிற்க்கு காண வரும் சுதாகர்.ஆளூரில் அம்மா வீட்டில் நின்று படித்த எனக்கு சொந்த ஊர் மணப்பாடு.சுந்தரராமசாமியின் பல நண்பர்களில் நானும் ஒருவன்.நான் இப்போதும் துபாயில் தான் உள்ளேன்.வாழ்க்கையில் கால் ஊன்றுவதற்க்கான போராட்டத்தில் கைவிட்டுப் போன எழுத்தையும் வாசிப்பையும் மீட்டெடுக்கவும்,தீவிரமாக எழுதவும் நான் ஒரு வலைப்பதிவை துவங்கியுள்ளேன்.முகவரி-http://chithaivukal.blogspot.com,உங்கள் கருத்தை கூறவும்.

அஜிதன்,சைதன்யா,அருண்மொழி அக்கா அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

சுதாகர்.

[email protected]

அன்புள்ள சுதாகர்

நலம். நீங்களும் நலமே என நினைக்கிறேன். சுரா இறந்த ஒருவருடம் க்ழிந்த நாளில் நீங்கள் இங்கே வந்ததும் நாம் பேசியதையும் நினைத்துக்கொண்டேன். நீங்கள் மிண்டும் இலக்கியம் பக்கம் திரும்புவது உற்சாகம். திரும்பி வர ஓர் இடம் இருப்பது நல்ல விஷயம் அல்லவா?

தலைப்பு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பழைய கால தலைப்பு. இருத்தலியல் மோகம் இருந்த நாட்களில்தான் சிறு பத்திரிகைகளுக்கு இப்படியெல்லாம் தலைப்பு வைப்பார்கள்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் கூறுவது சரிதான்.இத்தலைப்பு நான் கல்லூரி நாட்களில் துவங்க நினைத்திருந்த சிறு பத்திரிக்கையின் தலைப்பு.புறவயமான வாழ்வின் சூழல் மாறிய போதும் அர்த்தமுள்ள வாழ்வை குறித்த கேள்விகளும்,குழப்பங்களும் என்னில் ஒரு மாற்றமும் இல்லாது இப்பொதும் அப்படியே தங்கியிருக்கின்றன.அதனால் தான் இந்த தலைப்பு.கவிதைகள் எல்லாம் கல்லூரி நாட்களில் எழுதியவை.முழுமைப்பெறாத நாவலும்.பழுப்பேறிய தாள்களிலிருந்து தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.சுரா ம்னுஷ்யபுத்திரனிடம் கொடுக்கச் சொல்லிய கவிதைகள்.அதன் தகுதி சார்ந்த குழப்பம் காரணம் நான் அதை கொடுக்கவில்லை.கவிதைகளை குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக கூறவும்.

அன்புடன்,

சுதாகர்

முந்தைய கட்டுரைசங்க காலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவசை:கடிதங்கள்