அன்புள்ள ஜெயமோகன்,
விஷ்ணுபுர கஷ்யபரின் குலத்தில் மனம் பற்றிய அறிவு மிகவும் வளர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மனதை ஒரு உடலில் இருந்து மற்றவுடலுக்கு மாற்றுகிறார்கள்.
மனதைத் திருடுகிறார்கள். மனதை மாற்றியமைக்கிறார்கள். ஆனால் குறைவற்ற பிரளயதேவியைச் செய்ய சிற்பி சாத்தனின் கை தேவைப்படுகிறது.
கலைஞனின் படைப்பிற்கான சிறப்பிடம். விஷ்ணுபுரத்தை நெருங்கி நோக்கினால் நகைபோல நுணுக்கமாகவும், பரந்து விரிந்தும் உள்ளது.
ஒவ்வொரு வாசிப்பிற்கும் வடிவம் மாறிக்கொண்டேயிருக்கிறது.
அன்புடன்
ஆனந்தன்
புனே
அன்புள்ள ஆனந்தன்
பொதுவாக எழுத்தாளர்கள் சிருஷ்டித்தன்மையைக் கடவுளைத் தவிரப் பிறருக்கு அளிக்க ஒத்துக்கொள்வதே இல்லை
ஜெ
Dear Sir,
It took me few months to complete your master piece and when I finished reading it last monday, it took me few days to come out of its trance and resume my day-to-day activities. Its vision is stunning and breath taking. I have never read anything like this before. I want to write a lot to you as a reader and your literary effort warrants a well penned letter in Tamil. But I am still making baby steps in Murasu Anjal software and in the meanwhile I couldn’t control myself in writing a letter albeit a small one to you
This Vishnupuram literature definitely made a profound change in my perception about life. I’ll be visiting Chennai next month on a 1 month holiday and if your schedule permits I would consider it an honor to meet you in Chennai. Can I also write to Vishnupuram website directly? Kindly let me know. I would like to participate with like minded people there. This is definitely something I look forward
Sincerely
Thuvijaha Sharma
அன்புள்ள ஷர்மா,
நன்றி. நீங்கள் முரசு அஞ்சலுக்குப்பதில் NHM மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
சென்னைக்கு நீங்கள் வரும்போது கண்டிப்பாகச் சந்திக்கலாம்.
ஜெ
ஜெ,
விஷ்ணுபுரத்தில் இருக்கிறேன்
ஒரு சந்தேகம். விஷ்ணுபுரத்தில் பிங்கலனின் உளவியல் ஓட்டத்தில் ஃப்ராய்டிசத்தின் அம்சங்கள் அதாவது இடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் சாயல்கள் உள்ளன. அவை நம்முடைய மரபிலே உள்ளவைதானா? இன்றைய சிந்தனைகள் அல்லவா?
இன்னொரு சந்தேகம். அதில் காகம் ஏன் ஏன் என்று கேட்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. காக்கைக்கு அப்படி ஒரு அர்த்தம் நம் மரபிலே உண்டா? அது சனிபகவானின் வாகனம் என்ற அளவில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்
விஷ்ணுபுரத்திலே எனக்குப்பிடித்தது அதில் மன ஓட்டங்களாக வரக்கூடிய இடங்கள். வேகமாகப் பறந்து போகக்கூடிய அந்த மொழி. அதன் illogical construction. அதைப்போல யானைகள்.
கிரி அரவிந்தன்
அன்புள்ள கிரி
இடிபஸ் உளச்சிக்கல் ஃப்ராய்ட் கண்டடைந்தது அல்ல. அது கிரேக்க மரபிலேயே பேசப்பட்டது. அதை அவர் உளவியலால் விளக்க முற்பட்டார். இந்திய மரபின் பலகதைகளில் அந்த அம்சம் பலவாறாகப் பேசப்பட்டுள்ளது. சினிமாவில்கூட ஒரு புராணக்கதையை எடுத்தாண்டிருப்பார்கள்.
கதை இதுதான். ஒருவர் பல்வேறு தாசிகளிடம் சென்று தனக்கு உகந்த தாசியைத் தேர்வுசெய்வார். உடல்பொருளாவி அனைத்தையும் அவளிடம் அர்ப்பிப்பார். அதன் விளைவாக அழிவார். காரணம் அவள் முந்தைய பிறவியில் அவருடைய அன்னை.
சினிமாவில் அந்த உண்மை தெரிந்து ஒரு மாடு அழுவதாக வரும். அவரால் மீளமுடியாதே என. நான் படத்தை எப்போதோ பார்த்திருக்கிறேன். எங்கே எந்தப் படம் என நினைவில்லை
காகம் கத்துவது கா என்று. சம்ஸ்கிருதத்தில் அது ஏன் என்று பொருள் படும். அதையே சங்கர்ஷ்ணன் உணர்கிறான்
ஜெ
ஃப்ராய்டிசம்